உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலையில் நடிகர் திலீப் சுவாமி தரிசனம்; அதிகாரிகளுக்கு தேவசம் போர்டு நோட்டீஸ்

சபரிமலையில் நடிகர் திலீப் சுவாமி தரிசனம்; அதிகாரிகளுக்கு தேவசம் போர்டு நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பத்தினம்திட்டா: சபரிமலையில் நடிகர் திலீப் உள்ளிட்டோருக்கு வி.ஐ.பி., தரிசனத்திற்கு அனுமதித்த விவகாரத்தில் அதிகாரிகளுக்கு திருவாங்கூர் தேவசம் போர்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் தொடங்கிய நிலையில், நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், சபரிமலையில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால், பக்தர்கள் சுமூகமாகவும், பாதுகாப்பாகவும் தரிசனம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை திருவாங்கூர் தேவசம் போர்டு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த டிச.,5ம் தேதி கோவில் நடை அடைக்கும் முன்பு நடிகர் திலீப் முன்வரிசையில் நெடுநேரம் நின்று சாமி தரிசனம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து விசாரித்த சென்னை ஐகோர்ட், திலீப்புக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதியளித்ததன் மூலம், நீண்ட தூரம் நடந்து வந்த பக்தர்களுக்கு இடையூறாக இருக்காதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிலையில், வி.ஐ.பி., முறையில் நடிகர் திலீப் உள்ளிட்டோரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து 4 அதிகாரிகளுக்கு திருவாங்கூர் தேவசம் போர்டு விளக்கம் கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் அறிக்கையில் திருப்தியளிக்காத பட்சத்தில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
டிச 08, 2024 23:00

நடிகை, நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கோவிலில் மட்டும் அல்ல, பொதுவாகவே எல்லா இடங்களிலும் நிறுத்தப்படவேண்டும். நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கும், மக்களின் உயிரை காப்பாற்றும் மருத்துவர்களுக்கும், கல்வி போதிக்கும் ஆசிரியர்களுக்கும் கோவில் தவிர்த்து, மற்ற இடங்களில் முக்கியத்துவம் கொடுங்கள். அரசியல்வாதிகளை முற்றிலும் புறக்கணிக்கவும்.


M Ramachandran
டிச 08, 2024 19:44

சமூக நீதி என்ற போர்வையில் இரு மதத்தினரை மட்டும் கண்ணில் வைத்து போற்றும் கும்பல் பெருவாரியான மதத்தினரின் உணர்வூகலிய்ய துன்புறுத்துவது மத வாழிபாடு ஸ்தலங்களில் V.V.I.P தரிசனத்திற்காக மற்ற சாதாரண மக்களை காக்க வைப்பது எதில் சேர்ப்பது? புத்தி பேதலித்து ஒட்டு போட்டு சுயநல கும்பலை உட்கார வைத்தது யார் குற்றம்?


Prabakaran Prabakaran
டிச 08, 2024 18:31

சாமியே சரணம் ஐயப்பா ஐயப்பா என்பது தமிழ் பெயர் ஆனால் அங்கு மலையாளம்,ஆங்கிலம்,ஹிந்தி, ஆகிய எழுத்துக்கள் எழுதபட்டுள்ளது. இதையும் நீதி மன்றம் கேட்க வேண்டும்


Rajamani K
டிச 08, 2024 18:53

மோசமான எண்ணம். தமிழ் தமிழ் என்று பெருமைப்படலாம். தவறில்லை. ஆனால் உங்கள் இந்த எண்ணம் அசிங்கம்.


ஆரூர் ரங்
டிச 08, 2024 21:23

ஸ்வாமி சரணம் இரண்டுமே தமிழ்ப் பெயர்களல்ல.


அப்பாவி
டிச 08, 2024 18:18

தந்திரிலேருந்து எல்லோரும் கூத்தாடிகளுக்குத் துணை போறாங்க.


S. Venugopal
டிச 08, 2024 19:12

வி ஐ பி கள் தரும் தட்சணைகளுக்காகத்தான் .........


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை