உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊதி பெரிதாக்க வேண்டாம்; ஆளை கண்டுபிடிங்க; பவன் கல்யாணுக்கு சொல்கிறார் பிரகாஷ் ராஜ்

ஊதி பெரிதாக்க வேண்டாம்; ஆளை கண்டுபிடிங்க; பவன் கல்யாணுக்கு சொல்கிறார் பிரகாஷ் ராஜ்

ஹைதராபாத்; திருப்பதி லட்டு விவகாரத்தை ஊதி பெரிதாக்காமல் குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுங்கள் என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதியாகி இருப்பது பூதாகரமாகி உள்ளது. கடும் நடவடிக்கை கோரி பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், துணை முதல்வர் பவன் கல்யாண் சநாதன தர்ம பாதுகாப்பு வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இந்நிலையில், அவருக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி உள்ளதாவது; அன்புள்ள பவன் கல்யாண். நீங்கள் துணை முதல்வராக இருக்கும் மாநிலத்தில்தான் நடந்துள்ளது. தயவு செய்து விசாரித்து குற்றவாளிகளை கண்டுபிடியுங்கள். ஏன் தேசிய அளவில் ஊதி பெரிதாக்கி அச்சத்தை பரப்புகிறீர்கள். இவ்வாறு நடிகர் பிரகாஷ் ராஜ் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

xyzabc
செப் 29, 2024 03:08

பிரகாஷ் நீ வூதாமல் இருந்தால் சரி


RUDHRAMURTHI TRPALLI
செப் 27, 2024 23:19

விஜய்யை பார்த்தால் பயம்


Bhaskaran
செப் 25, 2024 14:47

உனக்கும் இதுக்கும் என்ன சம்பந்தமம்


SIVA
செப் 25, 2024 08:05

எல்லாம் உங்க ஆளுங்க கிட்ட இருந்து கத்துக்கிட்டது தான் , நல்ல பழக்கம் எளிதாக அடுத்தவரை பார்த்து வராது , ஆனால் கேட்ட பழக்கங்கள் எளிதாக வரும், இது எல்லாம் நீங்க ஆரம்பிச்சு வச்சுதான் .....


K. Sekar
செப் 22, 2024 22:40

இது இந்துக்களின் உணர்வுகளை பாதிக்கும் ஒரு ஈனச்செயல். இதில் உம்மை போன்ற பாவாடைகள் கருத்துக்கூற தேவையில்லை. பவகல்யாண் உணர்வு ஒவ்வொரு இந்து தர்மத்தை கடைபிடிப்பவரின் உணர்வு.


sankar
செப் 22, 2024 15:14

மற்ற மதத்துக்காரர் இங்கே என்ன வேலை ?


sridhar
செப் 22, 2024 11:27

ஆளை கண்டுபிடிச்சாச்சு, உங்க ஆளுங்க தான்.


S. Neelakanta Pillai
செப் 22, 2024 06:45

என்ன, கமிசன் வந்ததோ. சுதி இறங்கி இருக்கு, ஊதி பெரிதாக்க வேண்டாம் என்று அறிவுரை எல்லாம் சொல்லுது. நடிகன், பணம் இருக்கு, செல்வாக்கு இருக்கு, அரசியலில் அப்பன் சம்பாதித்த பணம் இருக்கு செல்வாக்கு இருக்கு என்று அரசியலுக்கு வருபவனை ஏற்றுக்கொள்ளவே கூடாது. ஏற்றுக்கொண்டால் இதுபோன்ற நம்பிக்கை துரோகங்கள் செய்வார்கள். இது இங்கே விஜய்க்கும் பொருந்தும்.


Narasimhan
செப் 21, 2024 18:05

பிரகாஷ் ராஜ் ஒரு சொம்பு . அவருக்கெல்லாம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறீங்க


rishi
செப் 21, 2024 16:00

சீமானுக்கும் , பிரகாஷ் ராஜ்க்கும் மிஷினரிகள் சிந்தனையில் பேசுகிறார்கள், இந்த விஷயத்தில் இந்துக்கள் ஓன்று பட்டுவிடாமல் பார்த்துகொள்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை