உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கையை நீட்டும் போது தட்டாமல் உதவிக்கரம் நடிகை ராகினி திவேதியின் பாலிசி

கையை நீட்டும் போது தட்டாமல் உதவிக்கரம் நடிகை ராகினி திவேதியின் பாலிசி

கன்னட திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராகினி திவேதி, 36. பெங்களூரை சேர்ந்தவர். 'பீயிங் ஹியூமன்' என்ற அமைப்பின் நிறுவனராக உள்ளார். இந்த அமைப்பின் மூலம் ஏராளமான சமூக சேவைகளை செய்து வருகிறார். அமைதி மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்கும் அமைப்பான 'ஜே அண்ட் கே பீஸ்' பவுண்டேஷனில் திட்ட மேலாளராகவும் பணியாற்றிய அனுபவம் உடையவர். சமூக சேவைகள் செய்வது குறித்து ராகினி திவேதி கூறியதாவது:பிறரை கவனித்துக் கொள்வதற்கு முன்பு பெண்கள், தங்களை தாங்களே முதன்மைபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு நிறைய உடன்பாடு உண்டு. பெண்களை நிலை நிறுத்தவும், அவர்களை முன்னுக்கு கொண்டு வரவும் ஒரு ஆதரவு குழு எப்போதும் தேவையாக இருக்க வேண்டும். தவறு செய்யாமலேயே போதைப் பொருள் வழக்கில் நான் சிறையில் இருந்த போதும், மன உறுதியை மட்டும் என்றும் கைவிடவில்லை. நான் சினிமா துறைக்குள் நுழைந்தபோது எனக்கு, 'காட்பாதர்' என்று யாருமில்லை. என்னை நானே முழுமையாக தற்காத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அனைத்து துறைகளில் பணியாற்றும் பெண்களும், தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும்.நடிகையாக மட்டுமின்றி சமூகத்திற்கு அர்ப்பணிப்பு உள்ள நபராக இருக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள். யாராவது உதவி என்று கையை நீட்டும் போது, கையை தட்டி விடாமல் உதவிக்கரம் நீட்ட வேண்டும். உதவி செய்வதன் மூலம் மனிதாபிமானம் அதிகரிக்கிறது. மற்றவர்களும் நம்மை நம்புவதற்கும், நேசிப்பதற்கும் ஒரு வாய்ப்பு உண்டு. உதவி செய்வது வாழ்க்கையில் நம்பிக்கையையும், நேர்மறையான மாற்றத்தையும் ஏற்படுத்தும். பீயிங் ஹியூமன் அமைப்பின் மூலம் பலருக்கு உதவி செய்துள்ளோம். வரும் காலத்திலும் நிறைய பேருக்கு உதவி செய்ய காத்திருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார். -- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை