உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதானி விவகாரம்: கோட்டக், செபி மீது பாய்ந்த ஹிண்டன்பர்க்

அதானி விவகாரம்: கோட்டக், செபி மீது பாய்ந்த ஹிண்டன்பர்க்

புதுடில்லி: 'அதானி' குழுமத்தின் மீது, பங்குச் சந்தை முறைகேடு குறித்து அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு, 'செபி' அண்மையில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.இதற்கு பதிலளித்துள்ள ஹிண்டன்பர்க், 'கோட்டக் மஹிந்திரா' வங்கி மீதும் அதன் தலைவர் உதய் கோட்டக் மீதும் குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் செபி மீதும் கேள்வி எழுப்பி உள்ளது.

செபியின் குற்றச்சாட்டு

'கிங்டன் கேப்பிடல் மேனேஜ்மென்ட்' எனும் நிறுவனமும், ஹிண்டன்பர்க் நிறுவனமும் இணைந்து, அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலையில் குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்தி, லாபத்தை பகிர்ந்து கொண்டுள்ளதாக செபி தெரிவித்துள்ளது.மேலும், இதற்காக கிங்டன் நிறுவனம், கே.ஐ.ஓ.எப்., எனும் பண்டு திட்டத்தை பயன்படுத்தி, 8.50 லட்சம் அதானி குழும பங்குகளில், முன்பேர வர்த்தகம் வாயிலாக, முதலீடு மேற்கொண்டு 183.24 கோடி ரூபாய் ஈட்டியதாக குற்றம் சாட்டியுள்ளது.

ஹிண்டன்பர்கின் பதில்

அதானி குழுமத்தின் மீதான எங்களுடைய முதலீடு முயற்சி அனைவரும் அறிந்ததே. மேலும், கிங்டன் உடன் இணைந்து நாங்கள் ஈட்டிய லாபம், வெறும் 34 கோடி ரூபாய் மட்டுமே. இதிலும் அதானி குழுமம் தொடர்பான ஆராய்ச்சிக்கான செலவு போக, எங்களுக்கு கிடைத்த லாபம், மிகக் குறைவு.செபி அனுப்பியுள்ள நோட்டீசில், 'கோட்டக் மஹிந்திரா இன்வெஸ்ட்மென்ட்ஸ்' நிறுவனத்தின் பெயரை, கே.எம்.ஐ.எல்., என சுருக்கி மறைத்துள்ளது. லாபம் ஈட்டியதற்காக கிங்டன் கேப்பிடல் பயன்படுத்திய கே.ஐ.ஓ.எப்., எனும் பண்டு திட்டம், கே.எம்.ஐ.எல்., நிறுவனத்தின் வெளிநாட்டு பண்டு திட்டமாகும்.இந்த பண்டு திட்டத்தை துவங்கியதில் கோட்டக் வங்கிக்கும், கோட்டக்கின் பங்கு தரகு நிறுவனங்களுக்கும் பங்கு உள்ளது. கோட்டக் வங்கியின் தலைவர் உதய் கோட்டக், கடந்த 2017ம் ஆண்டு, செபி அமைத்த 'கார்ப்பரேட் கவர்னன்ஸ்' குழுவுக்கு தலைவராக இருந்தார்.இந்நிலையில், கோட்டக் வங்கி குறித்தும், அது தொடர்புடையவர்கள் குறித்தும் செபி குறிப்பிட மறுப்பது, இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு சக்திவாய்ந்த நபரை, செபி காப்பாற்ற நினைப்பது போலத் தோன்றுகிறது. அதானி குழுமம் குறித்த எங்களது ஆராய்ச்சி, இன்றளவில் எங்களின் சிறந்த பணியாகும். இதை லாபம் ஈட்டும் நோக்கில் மட்டும் நாங்கள் மேற்கொள்ளவில்லை.

கோட்டக் மறுப்பு

இந்நிலையில் ஹிண்டன்பர்க் தங்களுடைய வாடிக்கையாளரே இல்லை என்று, கோட்டக் தெரிவித்துள்ளது. மேலும் ஹிண்டன்பர்க் குறிப்பிட்டுள்ள பண்டு திட்டம், செபியில் பதிவு செய்யப்பட்ட திட்டம் என்று தெரிவித்துள்ள கோட்டக், இத்திட்டத்தில் முதலீட்டாளர்களை இணைக்கும் போது, முறையான கே.ஒய்.சி., விதிகள் பின்பற்றப்படுவதாக கூறியுள்ளது.மேலும், இதில் முதலீடு செய்துள்ளவர்களுக்கும், ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கும் தொடர்பிருந்தது பற்றி தங்களுக்கு தெரியாது என்றும் தெரிவித்துள்ளது. மொத்தத்தில், அதானி -- ஹிண்டன்பர்க் விவகாரம், புலி வாலை பிடித்த கதையாக, பிரச்னை தீராமல், புதிய புதிய குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

RAMAKRISHNAN NATESAN
ஜூலை 03, 2024 16:31

அதானி மீது அவதூறு பரப்பிவிட்டு, ஹிண்டன்பர்க் தொடர்புள்ள ஒரு FII அவரது நிறுவனத்தின் பங்குகளையே வாங்கும் வரை செபி மூலையில உட்கார்ந்து செல்பி டெஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்துச்சா ????


duruvasar
ஜூலை 03, 2024 11:52

இது வழக்கமான வாடிக்கையாகி போன விஷயம்தான். ஒவ்வொரு முறையும் பிர்லிமெண்ட் கூட்டம் ஆரம்பிக்கும் அன்றோ அல்லது கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும் போதோ வெளிநாட்டில் உள்ள பத்திரிக்கை இதுபோன்ற ஒரு ஆய்வு கட்டுரை என்ற பெயரில் ஒரு சர்ச்சையை எழுப்புவார்கள். நமது எதிர் கட்சிகளும் சபையை நடத்தவிடாமல் கூச்சல் போட்டு வெளிநடப்பு செய்து காந்தி சிலை முன் அமர்ந்து தர்ணா பௌராட்டம் செய்வார்கள். இது தொடர்கதை. இது சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்து இதில் எந்த முறைகேடும் நடந்ததாக தெரியவில்லை ஏன் வந்த பிறகும் நமது நாட்டு கோர்ட்கள் மீது நம்பிக்கை வைக்காமல் அந்நிய பத்திரிக்கை கட்டுரைகளை நம்பும் அறிவாளிகள் ஆக இருக்கிறார்கள். இதை பேச மொஹுவா மொய்த்ரா போன்ற எம்பிக்கள் காசு வாங்கிக் கொண்டு இந்த விஷயத்தை பற்றி கேள்வி எழுப்புவார்கள். இது ஒரு டூல் கிட் கும்பல்.


Sampath Kumar
ஜூலை 03, 2024 09:56

அலைக்கற்றை ஏலத்தில் அப்போதேய காங்கிரஸ் அரசு உள்ள செய்து விட்டது தி மு காவுடன் சேந்து சுமார் ஒரு லச்சம் கோடி அடித்து விட்டார்கள் என்று காற்றில் கோடா ஊழல் செய்கிறார்கள் என்று ஊடகங்கள் எல்லாம் ஓன்று சேர்ந்து கதறியது இப்போ அதே அலைக்கற்றை ஏலத்தில் எதனை கோடிக்கு ஏலம் பொன்னது என்று பார்த்தால் சுமார் 12,000 கோடிக்கு மட்டுமே ஏலம் என்றால் குறைந்த தொகையில் தொடக்கி அதிக தொகைக்கு கொடுப்பது தானே வழக்கம் ஆனல் இங்கே இது எல்லாம் தளி கீழ நடந்து உள்ளதே இதை பற்றி பேச கருது சொல்ல ஒரு பிஜேபி சொம்பையும் காணோம் களவாணி பயலுக ஏன் திருட்டு குழு நாட்டிகளை ரோம்ப யோகிய உத்தம புத்திரன் மாதிரி வேஷம் போட்டு ஊடகத்தின் ஒட்டகத்தின் துணையுடன் ஆட்சியை பிடித்த அய்யோக்கிய அரிய கும்பல் எல்லாம் இங்கே வந்து ஊளை பற்றி வகுப்பு ஏடுப்பது சாத்தன் வேதம் ஓதுவதற்கு சமம் இங்கே எந்த ணெண்ட்சும் சுத்தம் இல்லை போங்க


ஆரூர் ரங்
ஜூலை 03, 2024 10:21

2 ஜி வந்த போது கால் சார்ஜ் எவ்வளவு? இப்போ எவ்வளவு? SMS? அன்லிமிடட் கால் அப்போது இருந்ததா? அப்போதும் இப்போதும் ஏலம் விடப்பட்ட அலைக்கற்றை எவ்வளவு? ஒண்ணுமே தெரியாம கமெண்ட்?


வீரபாண்டி,அலங்காநல்லூர்
ஜூலை 03, 2024 11:00

யோவ் துண்டு சீட்டு சமச்சீர் சம்பத்து நீ எப்படிய்யா இவ்வளவு பெரிய ஆர்ட்டிகள் போட்ருக்க அதுவும் தப்பும் தவறுமா உன்னை எவ்வளவு கழுவி ஊற்றினாலும் வெட்கமில்லையா? நீயெல்லாம் திருந்த மாட்டியா


Kannan
ஜூலை 03, 2024 11:58

நீ எந்த ஊருல படித்த அறிவாளி ஒன்னு ரெண்டு தெரியதா என்ன சொல்ல வர உனக்கு திருட்டுக்கு TMK சொம்பு அடி மத்தவர்களுக்கு வேண்டாம் நீ எப்பவும் பெரிய அறிவலிமாதிரி கருத்து போடுற


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 03, 2024 16:34

ஏலத்தில் அதிக ரேட்டுக்கு போகவில்லை ???? போர் ஜி மற்றும் பைவ் ஜி இவற்றுக்கு இடையேயான பர்பாமென்ஸ் வேறுபாடுகள் பெரிய அளவில் இல்லை, வாடிக்கையாளர்களிடையே பெரிய வரவேற்பு இல்லை ன்பதும் ஒரு முக்கியக் காரணம் ....


பாமரன்
ஜூலை 03, 2024 09:35

ஆக எல்லாருமே களவாணி பயலுகன்னு புரியுது...


சாமிநாதன்,மன்னார்குடி
ஜூலை 03, 2024 11:03

நீதான் பெரிய களவாணி..


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 03, 2024 16:36

பாஜக அரசின் கியரை ஆட்டி, கவ்வி டீசல் வருதான்னு பார்க்கும்போது இதெல்லாம் புரியல .....


ஆரூர் ரங்
ஜூலை 03, 2024 09:16

ஜார்ஜ் ஸோரோஸ் சோனியா காங்கிரஸ் தொடர்பை ஆராய வேண்டும். தனிப்பட்ட ஆதாயத்திற்காக அறிக்கை வெளியிட்டு ஹிண்ட்பர்க் குற்றமிழைத்துள்ளது புரிகிறது.


Barakat Ali
ஜூலை 03, 2024 19:59

ஆட்டக்காரிக்கு ஆட்டத்தின் மீதுதான் கண் இருக்கணும் .....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை