உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே தலையாய முன்னுரிமை: பிரதமர் மோடி

பெண்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே தலையாய முன்னுரிமை: பிரதமர் மோடி

கோல்கட்டா: பெண்கள் வாழ்க்கை முழுவதும் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே பாஜவின் தலையாய முன்னுரிமை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.மேற்கு வங்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது:இந்த ஆண்டு மே 4 ம் தேதி மேற்கு வங்கம் ஒரு புதிய மாற்றத்தை தேர்வு செய்தது. இந்த மாற்றத்தில் தாய்மார்களும் சகோதரிகளும் முக்கிய பங்காற்றி உள்ளனர் என்பதை நான் அறிவேன். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பல இன்னல்களை சந்தித்து உள்ளீர்கள். பல விஷயங்களுக்காக நீண்ட நாட்கள் காத்து இருந்துள்ளீர்கள். அதனால் தான் பேச்சு குறைவு செயல் அதிகம் என்ற முக்கிய கொள்கையை நாங்கள் முன்னெடுத்து செல்கிறோம். மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே பல திட்டங்கள் துவங்கப்பட்டன. ஏராளமான பெண்களின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டுள்ளது. பணம் குறைக்கப்படவில்லை. இடைத்தரகர்கள் இல்லை. மேற்கு வங்கத்தில் பணத்தை குறைப்பது என்பது இனியும் நடக்காது.பெண்களின் வாழ்க்கையில் முழுவதும் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே பாஜவின் தலையாய முன்னுரிமை. தாய்மார்களுக்கும், மக்களுக்கும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sivak
செப் 17, 2026 19:41

ஏற்கனவே பெண்களுக்கு ஓ சி பஸ் ஓ சி காசு இட ஒதுக்கீடு எல்லாம் இருக்கு.., ஆண்களுக்கு தான் எதுவும் இல்லை ... மோடிஜி ஆண்களையும் கொஞ்சம் பாருங்க ...


SUBBU,MADURAI
செப் 17, 2026 18:14

1990 ம் ஆண்டு நடந்த ஒரு ரயில் பயணத்தில் நடந்த உண்மைக் கதை: அஸ்ஸாமைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்களான ரயில்வே பயிற்சி ஊழியர்கள் லக்னோவிலிருந்து டெல்லிக்கு முன்பதிவு செய்த பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அன்று இரவு முன்பதிவு செய்யாத பயணிகளாக வந்தவர்கள் அவர்களுக்காக அப்பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளிலிருந்து அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதால், அந்தப் பயணம் அப்பெண்களுக்கு ஒரு பயங்கர கனவாக மாறியிருந்தது. இதனால் அவர்கள் பயந்துபோய், அவமானப்படுத்தப் பட்டனர். அடுத்த நாள் இரவு, அவர்கள் அகமதாபாத் செல்லும் ஒரு இரவு நேர ரயிலில் ஏறினர். இந்த முறை, அவர்களிடம் முன்பதிவு எதுவும் இல்லை. அவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர், மேலும் ரயில் நிரம்பி வழிந்தது. அவர்கள் ரயிலின் பயணச்சீட்டு அதிகாரியை (TTE) அணுகி, தாங்கள் அகமதாபாத்தை அடைய வேண்டும் என்று விளக்கினர். அந்த அதிகாரியும் உதவ முயன்று, ஏற்கனவே பயணிகளால் நிரம்பியிருந்த ஒரு பெட்டிக்கு அவர்களை அழைத்துச் சென்றார். தங்களுடன் பயணிக்கவிருந்த சக பயணிகளைக் கண்டதும் அந்த இரண்டு இளம் பெண்களும் பதற்றமடைந்தனர். ஆனால் அங்கிருந்த இரண்டு ஆண்கள் உடனடியாக அவர்களுக்கு இடம் கொடுத்து, அன்புடன் வரவேற்றனர். ஒரு நடுத்தர வயது ஆணும், அவருடன் வந்த இளையவரும். ரயில் பெட்டி நிரம்பி வழிந்ததால், அவர்கள் அனைவரும் அருகருகே அமர்ந்தனர். விரைவில், அவர்களின் உரையாடல் வரலாறு மற்றும் அரசியல் பக்கம் திரும்பியது. வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்த பெண்களில் ஒருவர், இந்து மகாசபை மற்றும் முஸ்லிம் லீக் ஆகியவற்றின் உருவாக்கம் பற்றிப் பேசினார். பின்னர், அந்த இருவரில் இளைய பெண், ஷ்யாமா பிரசாத் முகர்ஜியையும் அவரது மரணத்தைச் சுற்றியுள்ள மர்மத்தையும் குறிப்பிட்டார். அதுவரை அமைதியாகக் கேட்டுக்கொண்டும், மிகக் குறைவாகப் பேசிக்கொண்டும் இருந்த அந்த இளைஞன், திடீரென்று ஆர்வம் காட்டி, ஷ்யாமா பிரசாத் முகர்ஜியைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டான். அவள், தன் தந்தை கல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்ட மாணவராக இருந்ததாகவும், அங்கு முகர்ஜி துணைவேந்தராக இருந்ததாகவும், மேலும் அவர் ஒருமுறை தன் தந்தைக்கு கல்வி உதவித்தொகை ஏற்பாடு செய்திருந்ததாகவும் விளக்கினாள். பின்னர் அந்த இளைஞன், அவர்களுக்கு இவ்வளவு விஷயங்கள் தெரிந்திருப்பது மகிழ்ச்சி என்று அமைதியாகக் குறிப்பிட்டான். அந்த இளைஞன் அரிதாகவே பேசுவதை அவள் கவனித்தாள். அவன் பெரும்பாலும் மிகுந்த கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்தான். பின்னர், ரயில் முழுவதும் நிரம்பிவிட்டதால் அவர்களுக்குபடுக்கை வசதி செய்ய முடியாது என்று பயணச்சீட்டு அதிகாரி (TTE) கூறியபோது, ​​அந்த இரு ஆண்களும் சாதாரணமாக எழுந்து நின்றனர். பரவாயில்லை என்ற அவர்கள். நாங்கள் சமாளித்துக்கொள்வோம். அவர்கள் தரையில் ஒரு துணியை விரித்து, அந்த இரண்டு இளம் பெண்களுக்கும் தங்கள் படுக்கைகளை விட்டுக்கொடுத்துவிட்டு அங்கே உறங்கச் சென்றனர். உணவு வந்ததும், அந்த இரு ஆண்களில் இளையவன், அவர்கள் நால்வருக்கும் சேர்த்துப் பணம் செலுத்தினான். மறுநாள் காலை ரயில் அகமதாபாத்தை நெருங்கியபோது, ​​அந்த இரு ஆண்களும் அப்பெண்கள் தங்குவதற்கான இடத்தைப் பற்றிக் கேட்டனர். மூத்தவன், அவர்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், தன் வீட்டின் கதவுகள் அவர்களுக்காகத் திறந்திருப்பதாகக் கூறினான். இளையவன், தன் முகத்தில் ஒரு மெல்லிய கவலையுடன், தான் ஒரு நாடோடியைப் போல இருப்பதாகவும், அவர்களை அழைப்பதற்குத் தன்னிடம் ஒரு முறையான வீடு உண்மையில் இல்லை என்றும், ஆனால் தன் தோழனின் வீடு அவர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடத்திமிடமாக இருக்கும் அழைப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினான். ரயிலில் இருந்து இறங்குவதற்கு முன்பு, அந்தப் பெண்கள் மீண்டும் அவர்களின் பெயர்களைக் கேட்டனர். வீட்டை விட்டு வெகுதூரம் பயணித்த ஒரு பயணத்தில், தங்களுக்கு மிகுந்த மரியாதையையும், இருக்கைகளையும், உணவையும் அளித்து, இத்தகைய கருணையையும் பரிவையும் காட்டிய அந்த இரு அந்நியர்களின் பெயர்களை அவர்கள் மறக்க விரும்பவில்லை. அவள் குறித்துக்கொண்ட பெயர்கள்: சங்கர்சிங் வகேலா மற்றும் நரேந்திர மோடி. பல ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் துயரமான நாளில் நரேந்திர மோடியுடன் பயணம் செய்த பெண்ணான லீனா ஷர்மா, தொலைக்காட்சியில் நரேந்திர மோடியைப் பார்க்கும் போதெல்லாம், அந்தச் சூடான உணவும், அவர் ஒரு துணியின் மீது தரையில் படுத்திருந்ததும், அன்று இரவு ரயிலில் அவரிடமிருந்து தாங்கள் பெற்ற அந்த மென்மையான உபசரிப்பு, அக்கறை மற்றும் பாதுகாப்பு உணர்வும் நினைவுக்கு வருவதாக எழுதினார். இதிலிருந்தே பிரதமர் மோடிக்கு பெண்களின் மேல் உள்ள மதிப்பு மற்றும் மரியாதை ஆகிய குணங்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.


babu
செப் 17, 2026 16:29

இதையே இப்ப தான் கண்டுபிடிச்சீங்களா....


பிரேம்ஜி
செப் 17, 2026 17:55

சூப்பர்!


Ravichandran,Thirumayam
செப் 17, 2026 18:34

திராவிட சமச்சீர் மிலேய்ச்ச முட்டாக்களே மோடியைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? இதுக்குத்தான் படிங்கடா படிங்கடான்னு சொல்றது!


guna
செப் 17, 2026 18:56

பாபு இதை உன் பெற்றவர்களிடம் நீயே கேட்கவில்லையே


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ