உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜூனா மனு

கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜூனா மனு

கரூர் துயர சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. த.வெ.க., தலைவர் விஜயின் கரூர் பிரசாரக் கூட்டத்தில், நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில், சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. இந்த உத்தரவுக்கு எதிராகவும், நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிடக்கோரியும், த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தலைமை நீதிபதி அமர்வில், ஆதவ் அர்ஜுனா சார்பில் நேற்று ஆஜரான வழக்கறிஞர், இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, சி.பி.ஐ., விசாரணை கோரி, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மற்ற வழக்குகள், அக். 10ம் தேதி விசாரிக்கப்படும் நிலையில், அவற்றுடன் சேர்த்து, இந்த மனுவும் விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்தார். -டில்லி சிறப்பு நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை