மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
6 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
6 hour(s) ago
பெங்களூரு: சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டு உள்ள 'ஆதித்யா எல்1' விண்கலத்தில் உள்ள ஆய்வு கலன்கள், சூரியனில் இருந்து வெளியேறும் காற்றின் தாக்கத்தை கண்டறிந்துஉள்ளன.சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் கடந்த ஆண்டு செப்., 2ல் விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தில் ஏழு ஆய்வு கலன்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் நான்கு கலன்கள், சூரியனில் இருந்து வெளியேறும் ஒளியை ஆய்வு செய்யவும், மூன்று கலன்கள் பிளாஸ்மா மற்றும் காந்த புலங்களின் அளவுருக்களை அளவிடவும் அனுப்பப்பட்டுள்ளன.இந்த விண்கலம், சூரியனுக்கு மிக அருகில் உள்ள எல்1 எனப்படும் லாக்ராஞ்சியன் புள்ளியில் தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ளது.சூரியனில் இருந்து மிகப்பெரிய அளவில் வெளியேறும் பிளாஸ்மா மற்றும் காந்தப்புலம், 'கொரோனல் மாஸ் எஜெக் ஷன்' என்றழைக்கப் படுகிறது.இதில் உள்ள, 'பாப்பா' எனப்படும், ஆதித்யாவிற்கான பிளாஸ்மா அனலைசர் பகுப்பாய்வு தொகுப்பு, சூரியனில் இருந்து கடந்த ஆண்டு டிச., 15 மற்றும் பிப்., 10, 11ல் வெளியேறிய எலக்ட்ரான்களின் நிலையை கண்டறிந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.மேலும் சூரிய காற்றில் இருந்து வெளிப்படும் எல்ட்ரான் மற்றும் அயனிகளை, தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளி துகள்கள், ஆகியவற்றை ஆய்வு செய்து வருகிறது.
6 hour(s) ago | 1
6 hour(s) ago