உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 4 நாள் கழித்து 3ம் கட்ட ஓட்டுப்பதிவு சதவீதத்தை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

4 நாள் கழித்து 3ம் கட்ட ஓட்டுப்பதிவு சதவீதத்தை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 3ம் கட்ட ஓட்டுப்பதிவு மே 7 ம் தேதி நடந்தது. அதில் 65.68 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக 4 நாட்கள் கழித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. முதல் கட்ட ஓட்டுப்பதிவு முடிந்து 11 நாட்கள் கழித்தும், இரண்டாம் கட்ட தேர்தல் முடிந்து 4 நாட்கள் கழித்தும் ஓட்டுப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இண்டியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே எழுதிய கடிதத்தில், ‛‛ லோக்சபா தேர்தலில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஓட்டு சதவீதத்தை வெளியிடுவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. தேர்தல் நடைபெற்று 24 மணி நேரத்தில் இறுதி ஓட்டுப்பதிவு சதவீதம் வெளியிடுவது வழக்கம். தற்போதைய தேர்தலில் நீண்ட தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என கேள்வி எழுப்பி இருந்தார்.இது குறித்து தேர்தல் ஆணையம் கார்கேவுக்கு எழுதிய கடிதத்தில், எதிர்க்கட்சி தலைவரின் கருத்து விரும்பத்தகாதது. ஆதாரமற்றது, குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பாரபட்சமான தகவல்களை உருவாக்கும் முயற்சி என தெரிவித்து இருந்தது. இந்நிலையில் 3ம் கட்டமாக கடந்த மே 7 ம் தேதி குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 93 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இது முடிந்து 4 நாட்கள் ஆன நிலையில், 65.68 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 66.89 சதவீத ஆண்களும், 64.41 சதவீத பெண்களும், 3ம் பாலினத்தவர் 25.2 சதவீதம் பேரும் ஓட்டுப் போட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Anantharaman Srinivasan
மே 11, 2024 23:30

ஓட்டு மிஷினில் பதிவாகும் ஓட்டுக்ககளை சரிபார்த்துச்சொல்ல நான்கு நாட்களா?? போஸ்ட் ஆபிசில் வேலைசெய்யும் கிளார்க்குகள் தினமும் அன்றயதின வசூலை பந்து பைசா கூட அதிகம், குறைச்சல் வராமல் tally செய்து போஸ்ட்மாஸ்டரிடம் கணக்கு ஒப்பிக்கிறார்கள்


THOMAS LEO
மே 11, 2024 20:44

Sorry Boss Calculate Battery power illai That why late


ஆரூர் ரங்
மே 11, 2024 20:13

சிறுசிறு தவறுகளுக்கும் கோர்ட்டுக்கு செல்லும் இக்காலத்தில் நூறு சதவீதம் சரியான புள்ளிவிவரங்களை அளிக்க நேரமெடுத்துக் கொள்வது புரிந்து கொள்ளக்கூடியதே. சின்னஞ்சிறு தவறு என்றாலும் மறுதேர்தல் கேட்டு வழக்குப் போடுவர். சுப்ரீம் கோர்ட்டின் சமீப தீர்ப்புகள் யாருக்கும் திருப்தியளிக்கும் வகையில் இருக்கிறதா?


s.sivarajan
மே 11, 2024 20:02

எது எப்படியோ திட்டமிட்டபடி ஜூன் 4ம் தேதி முடிவு அறிவிக்கப்பட்டால் சரி


Narayanan Muthu
மே 11, 2024 19:40

கை கூலிகள் தங்கள் வேலையை மிக சிறப்பாக செய்து வருகிறார்கள் திருடர்களுக்கு துணை போகும் தேர்தல் ஆணையம் இதற்கான பதிலை சொல்லியே ஆக வேண்டும்.


R Kay
மே 11, 2024 19:33

தேர்தல் ஆணையம் வேஸ்ட் .


R Kay
மே 12, 2024 00:37

அதிலும் ங்கள் ஊர்க்காரர் சாஹு சூப்பரோ சூப்பர்


GMM
மே 11, 2024 19:25

தேர்தல் நடத்துவது மாநில, உள்ளாட்சி அமைப்புகள் ஊழியர்கள் திறமைக்கு தகுந்த பணி தேர்தல் ஆணையம் மேற்பார்வை மட்டும் பல ஊழியர்கள், ஆளும் கட்சிக்கு நேரடி தொடர்பு இருக்கும் ஓட்டுப்பதிவு சதவீதம் அறிவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு, ஒப்புதல் தேவை அதன் பின் தான் அதிகார பூர்வ வெளியீடு இதில் கூட எதிர் கட்சி ஏன் பீதி, குழப்பம் ஏற்படுத்த வேண்டும்? ஓட்டு சீட்டில் ருசி கண்ட பூனை, evm ல் ஒன்றும் செய்ய முடியவில்லை


Balaji
மே 11, 2024 19:11

நாட்டை கடவுள் காப்பாற்ற நடித்ததால் தான் இதெல்லாம் நடக்கிறது பாய் நாடு தேச விரோதிகள் கையில் இல்லாமல் இருக்க என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கிறது ஹி ஹி


Anantharaman Srinivasan
மே 11, 2024 23:20

ஹிஹிஹி என்று உன் கமெண்டுக்கு நீயே சிரித்துக்கொள்


N Sakthivel
மே 11, 2024 18:14

தேர்தல் கமிஷன் நியாயமற்ற செயலை செய்கிறது. இது இந்தியா என்பதை அனைவரும் மறக்க வேண்டாம்


ramesh
மே 11, 2024 17:56

தேர்தல் கமிஸன் இப்படி இருந்தால் நடக்கும் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்ற சந்தேகம் ஏற்படுகிறது


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை