உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எல்லையில் அடங்க மறுக்கும் பாக்.,: எச்சரிக்கை விடுத்த இந்தியா

எல்லையில் அடங்க மறுக்கும் பாக்.,: எச்சரிக்கை விடுத்த இந்தியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எல்லையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்து உள்ளது.காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் பின்னால் உள்ள பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததுடன், பாகிஸ்தானியர்களை வெளியேற உத்தரவிட்டு உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5rfxgcgl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த தாக்குதலை பாகிஸ்தான் மறுத்து வருகிறது. தங்களுக்கும், இந்த தாக்குதலுக்கும் தொடர்பில்லை என சமாளித்து வருகிறது. மறுபுறம், கடந்த சில நாட்களாக எல்லையில் அத்துமீறி தொடர்ந்து இந்திய நிலைகளை நோக்கி தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்தியாவும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது.இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தான் அத்துமீறி நடத்தும் தாக்குதல் சம்பவம் குறித்து நேற்று இரு நாட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் ஹாட்லைன் மூலம் பேசினர். அப்போது, எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்தது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை