உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைமை நீதிபதி மீது தாக்குதல்: வழக்கறிஞர் மீது நடவடிக்கைக்கு அட்டர்னி ஜெனரல் அனுமதி

தலைமை நீதிபதி மீது தாக்குதல்: வழக்கறிஞர் மீது நடவடிக்கைக்கு அட்டர்னி ஜெனரல் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது காலணி வீசி தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி ஒப்புதல் அளித்துள்ளார்.சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 6ம் தேதி வழக்கமான பணிகள் துவங்கின. நீதிமன்ற எண் 1ல் தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு விசாரணையில் ஈடுபட்டு இருந்தது. அப்போது ராஜேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் காலணியை வீசினார். உடனடியாக பாதுகாவலர்கள் அதனை தடுத்ததுடன், அவரை வெளியேற்றினர். சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலத்தின் கஜூராகோவில் உள்ள கிருஷ்ணர் சிலையை சீரமைப்பது தொடர்பான வழக்கில் கவாய் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த செயலில் ஈடுபட்டதாக ராஜேஷ் கிஷோர் தெரிவித்து இருந்தார். இதற்காக தான் வருத்தப்படவில்லை எனவும் கூறியிருந்தார்.இது தொடர்பாக தலைமை நீதிபதி கூறுகையில், காலணி வீச்சு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பார் கவுன்சிலில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் பார் கவுன்சில் தலைவர் விகாஸ் சிங், 'ராஜேஷ் கிஷோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் ' எனக்கோரியிருந்தார். இந்நிலையில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி அவருக்கு எழுதிய கடிதத்தில், ' சஸ்பெண்ட் செய்யப்பட்ட வழக்கறிஞரின் செயல்களும் பேச்சுகளும் அவதூறானது மட்டும் அல்ல. சுப்ரீம் கோர்ட்டின் மகத்துவத்தையும், அதிகாரத்தையும் இழிவுபடுத்தும் நோக்கத்துடன் உள்ளன. இதுபோன்ற நடத்தை நீதி வழங்கும் அமைப்பின் அடித்தளத்தையே தாக்குகிறது ' எனக்கூறியுள்ளதுடன், குற்றவியல் நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கி உள்ளதாக தெரிவித்து உள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட வழக்கறிஞருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க அட்டர்னி ஜெனரல் அனுமதி வழங்கிய தகவலை, சுப்ரீம் கோர்ட்டில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Rajasekar Jayaraman
அக் 17, 2025 14:38

இது அநியாயம் ஒரு குறிப்பிட்ட மதத்தை இழிவாக பேச அவருக்கு யார் அனுமதி கொடுத்தது அவர் என்ன கடவுளா.


Venugopal S
அக் 17, 2025 13:07

இதற்கு எதற்கு பத்து நாட்கள், அன்றே கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும்.ஒருவேளை சம்பந்தப்பட்ட நபர் பாஜக ஆதரவாளரோ?


Modisha
அக் 17, 2025 08:45

...வழக்கா .


pmsamy
அக் 17, 2025 05:45

நீதிமன்றத்தில் நடக்கும் தவறான தரமற்ற நீதிபதிகளின் வழக்குகளின் முடிவுகள் அதிக அளவில் தவறாக இருக்கிறது. பொதுமக்கள் பலர் நீதிபதிகளை செருப்பால் அடிக்க விரும்புகிறார்கள் ஒருவன் தைரியமாக அதை செய்து விட்டான் அவனுக்கு பாராட்டுக்கள்.


Kasimani Baskaran
அக் 17, 2025 03:49

புத்த மதத்தை பின்பற்றும் தலைமை நீதிபதி தெரிவித்த இந்து மதம் பற்றிய தேவையற்ற கருத்துக்கு ஒருவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது சோகமானது. இப்படியே போனால் இந்துக்கள் சிறுபான்மை மதமாகத்தான் போகும். அரசியலமைப்புச்சட்ட அங்கீகாரம் உள்ள பதவியில் இருக்கும் தலைமை நீதிபதிக்கு அணைத்து மதங்களையும் சமமாக பார்க்கும் கண்ணோட்டம் மிக மிக முக்கியமானது - அது அவரது தீர்ப்புக்களை பாதிக்கும். அது இல்லாத தலைமை நீதிபதியை ஏன் பாராளுமன்றம் பதவி நீக்கம் செய்யக்கூடாது?


rama adhavan
அக் 17, 2025 01:03

யார் நடவடிக்கை எடுப்பது? தலைமை நீதிபதியே நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சொல்லி விட்டாரே?


தாமரை மலர்கிறது
அக் 16, 2025 23:53

ராஜேஷ் கிஷோர் எந்த தவறும் இழைக்கவில்லை. அவர் மீது அபாண்ட பழிபோடப்படுகிறது.


Krishna
அக் 16, 2025 23:39

Advocates & Judges are NOT Immune from Supreme-Peoples Law& Justice


V Venkatachalam
அக் 16, 2025 22:19

தலைமை நீதிபதி சொன்னார். செருப்பு வீசியது அதிர்ச்சி யாக இருந்தது..அதை அவர் கடவுள் கிட்ட தானே சொல்லணும்? ஏன் பப்ளிக் கில் சொன்னாரு?


C.SRIRAM
அக் 16, 2025 21:56

அதே போல உளறிய தலைமை நீதிபதிக்கும் எதாவது தண்டனை ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை