அசாமில் வரும் 23ம் தேதி அகத்தியர் விழா
கவுகாத்தி: அசாம் தமிழ்ச்சங்கம் சார்பில் வரும் 23 ம் தேதி அகத்தியர் விழா கொண்டாடப்பட உள்ளது.தமிழ் பாரம்பரிய மருத்துவம், மொழியின் இலக்கணத்துக்கு, பல்வேறு பங்களிப்புகள் வழங்கிய, அகத்தியரின் பெருமைகளை வெளிப்படுத்தும் வகையில், நாட்டின் தெற்கு - வடக்கு எல்லைகளை கலாசார ரீதியில் இணைக்கும் வகையில், மத்திய கல்வி அமைச்சகத்தின், பாரதிய பாஷா சமிதியும், அசாம் தமிழ்ச்சங்கமும் இணைந்து, வரும் 23ம் தேதி, கவுகாத்தி, கிரிஜானந்தா சவுத்ரி பல்கலையில், அகத்தியர் விழாவை கொண்டாட உள்ளன.