உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பணத்துடன் ஏஜென்ட் ஓட்டம்: ஓம் சக்தி பக்தர்கள் பரிதவிப்பு

பணத்துடன் ஏஜென்ட் ஓட்டம்: ஓம் சக்தி பக்தர்கள் பரிதவிப்பு

பெங்களூரு : பஸ் வசதி செய்வதாகக் கூறி, பணம் பெற்றுக்கொண்டு ஏஜென்ட் தப்பியோடியதால், நுாற்றுக்கணக்கான ஓம் சக்தி பக்தர்கள் பரிதவித்தனர்.பெங்களூரின், ஹனுமந்தேகவுடன பாளையாவில் வசிக்கும் நுாற்றுக்கணக்கான பெண்கள், மேல்மருவத்துாருக்குச் செல்ல ஓம்சக்தி மாலை அணிந்துள்ளனர்.இவர்களுக்கு பஸ் ஏற்பாடு செய்வதாக, ஏஜென்ட் குமார் என்பவர் கூறியுள்ளார். பக்தைகளும் அர்ச்சகர் மஞ்சுநாத் மூலமாக, குமாருக்கு பணம் கொடுத்தனர்.பெங்களூரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 650க்கும் மேற்பட்ட பக்தைகள், 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் கொடுத்திருந்தனர். ஒவ்வொருவரும் தலா 2,300 ரூபாய் கொடுத்திருந்தனர். நேற்று பஸ் மேல்மருவத்துாருக்கு புறப்படவிருந்தது.அதிகாலை 5:00 மணிக்கு, மாதநாயகனஹள்ளியில் பஸ்சுக்காக காத்திருந்தனர். ஆனால் மதியம் தாண்டியும் பஸ் வரவே இல்லை. யாத்திரிகர்கள் பரிதவித்தனர். பணத்துடன் ஏஜென்ட் குமார் தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் மாதநாயகனஹள்ளி போலீஸ் நிலையம் அருகிலேயே நடந்தும், போலீசார் பொருட்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை