உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா-சீனா எல்லை ரோந்துக்கு உடன்பாடு

இந்தியா-சீனா எல்லை ரோந்துக்கு உடன்பாடு

புதுடில்லி : எல்லையில் ராணுவம் ரோந்து செல்வது தொடர்பாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் இன்று துவங்கும் பிரிக்ஸ் மாநாட்டுக்காக பிரதமர் மோடி புறப்படும் நேரத்தில், முக்கியமான இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சீன அதிபரும் மாநாட்டுக்கு வருவதால் அவரும், மோடியும் பேச்சு நடத்த வாய்ப்பு உருவாகி இருக்கிறது.சீன அதிபர் ஷீ ஜின் பிங்கும், நம் பிரதமர் மோடியும் 2020க்கு முன், 18 முறை சந்தித்து பேசியுள்ளனர். அந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சீனப்படை நடத்திய திடீர் தாக்குதலுக்கு பின், இரண்டு தடவை மட்டுமே சந்தித்துள்ளனர். அதுவும் இந்தோனேஷியாவில் 2022ல் நடந்த ஜி-20 மாநாடு மற்றும் தென் ஆப்ரிக்காவில் 2023ல் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் நடந்த சந்திப்புகளே. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wr9zcnnw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

திடீர் தாக்குதல்

சீனாவுடன் நமக்கு எல்லை குறித்த பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. இதனால், எல்லைகள் இதுவரை துல்லியமாக வரையறை செய்யப்படவில்லை. பதிலாக, எல்.ஏ.சி., எனப்படும் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு, இரு நாட்டு ராணுவமும் அவரவர் பகுதியில் ரோந்து செல்கின்றன.இந்நிலையில், கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ரோந்து படை மீது, சீன ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. நம் வீரர்கள் எதிர்த்து தாக்கினர். மோதலில், 20 இந்திய ஜவான்கள் உயிரிழந்தனர். அதை காட்டிலும் இரு மடங்கு சீன வீரர்களும் பலியாகினர். இதையடுத்து, இரு தரப்பிலும் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டன. இரு தரப்பு உறவில், 45 ஆண்டுகள் இல்லாத வகையில் விரிசல் ஏற்பட்டது; அரசியல், சமூக, பொருளாதார உறவிலும் பெரும் தாக்கம் உண்டானது. எனினும், பிரச்னைகளுக்கு சுமுகமான தீர்வு காண்பது தான் இரு நாடுகளுக்கும் நல்லது என்பதை இரு தரப்பும் உணர்ந்துள்ளதால், பேசுவதை நிறுத்தவில்லை. ராணுவ அளவிலும், வெளியுறவு அமைச்சக அளவிலும் அதிகாரிகள் தொடர்ந்து பேசி வந்தனர். 2020 மோதலுக்கு முன், இரு நாட்டு ராணுவமும் எதுவரையில் ரோந்து சென்றனவோ, அதே நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக நின்றது. சீனாவோ மேற்படி சண்டையை தொடர்ந்து, நம் பகுதிக்குள் ஊடுருவிய நிலப்பகுதிகளில் இருந்து பின்வாங்க முடியாது என பிடிவாதமாக இருந்தது. அந்த இடங்களில் தாறுமாறாக கட்டுமானங்களையும் மேற்கொண்டது. இந்தியாவும் பதிலுக்கு எல்.ஏ.சி.,யை ஒட்டிய இடங்களில் சாலை அமைப்பது, தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்துவது என சுறுசுறுப்பு காட்டியது. இதை எதிர்பார்க்காத சீனா, மெல்ல மெல்ல இறங்கி வந்தது. எல்.ஏ.சி., பகுதியில் ஏழு ரோந்து இடங்கள் தொடர்பாக பிரச்னை இருந்தது. பல கட்ட பேச்சுக்குப் பின், ஐந்து இடங்களில் சமரசம் ஏற்பட்டு, படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. டெப்சாங்க், டெம்சோக் ஆகிய இடங்கள் தொடர்பாக மட்டும் பிரச்னை நீடித்தது.கடந்த நான்கு ஆண்டு களில் இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு துாதரக ரீதியில் 31 சுற்று, ராணுவங்களுக்கு இடையே 21 சுற்று பேச்சு நடந்தது. அதன் விளைவாக இப்போது, 2020 ஜூன் மாதத்துக்கு முன் இருந்த அளவில் இரு தரப்பும் ரோந்து செல்லலாம் என உடன்பாடு ஏற்பட்டுஉள்ளது. எல்லையில் இருந்து இரு நாட்டு படைகளும் முன்பிருந்த முகாம்களின் துாரத்துக்கு பின்னோக்கி செல்ல இந்த உடன்பாடு ஒரு துவக்கமாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி நேற்று கூறியதாவது:மிகவும் முக்கியமான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. நீண்டகாலமாக இருந்து வந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.

இடைவிடாத முயற்சி

ரஷ்யாவில் சீன அதிபரை, பிரதமர் மோடி சந்தித்து பேசுவது குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை. விரைவில் அது குறித்து தெரிவிக்கப்படும்.இவ்வாறு மிஸ்ரி கூறினார்.''இது மிகச் சிறந்த மற்றும் நேர்மறையான முன்னேற்றம். படைகளை விலக்கிக் கொள்ளும் விஷயத்தில் நம் முயற்சிகள் முழுமை அடைந்துள்ளன,'' என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திருப்தி தெரிவித்துள்ளார்.''இடைவிடாத முயற்சியால் இது சாத்தியமாயிற்று. பங்கேற்றவர்களில் சிலர் இது சாத்தியமில்லை என பல கட்டங்களில் வெறுத்துப் போயினர். ஆனாலும் நம் நிலைப்பாடு என்ன என்பதை பொறுமையாக, அதே சமயம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி வந்தோம். ரோந்து பணியை பொறுத்தவரை 2020ல் இருந்த நிலையே மீண்டும் தொடரும்,” என்றார் அவர்.இந்தியாவுடன் பொருளாதார உறவு பலப்பட வேண்டும் என சீனா விரும்புகிறது. அதன் சர்வதேச அரசியல் ஆதிக்க முயற்சிகளுக்கு தடை போடும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு இந்தியா துணை போகக்கூடாது என்றும் நினைக்கிறது. “ஆனால், எல்லையில் அமைதியை சீர்குலைத்து விட்டு, மற்ற இடங்களில் உறவை எப்படி வலுவாக்க முடியும்? என நாம் கேட்டுக் கொண்டே இருந்தோம்,” என்று வெற்றி ரகசியத்தை ஜெய்சங்கர் திரைநீக்கி காட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Constitutional Goons
அக் 22, 2024 21:26

சீனா,இந்திய எல்லையில் நிர்மானித்து வந்த கட்டுமானங்களையெல்லாம் நிறுத்தி விட்டதா? தானாகவே தகர்த்து விட்டதா?. சீனர்களுடன் சேர்ந்து இந்திய படையும் சீன கட்டுமானங்களை மேற்பார்வையிடப்போகிறார்களா? .


அப்பாவி
அக் 22, 2024 19:12

யாரப்பா இந்த அறிவாளி ராகுல் எங்கப்பா இங்க வந்தாரு முட்டுக் கொடுக்கிறதுக்கு சம்பந்தமே இல்லாம ஒரு முட்டு அல்லக்கை


அப்பாவி
அக் 22, 2024 18:50

கூடவே இன்னும் ஒரு பத்து, பாஞ்சுபில்லியன் டாலர்களுக்கு இறக்குமதி அதிகரிக்கும். ஆத்மநிர்பார் ஜொலி ஜொலிக்கும்.


ஆரூர் ரங்
அக் 22, 2024 16:20

சீன அரசின் படை ஏதுமில்லை. சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் கூலிப்படை மட்டுமே உண்டு..தேச பக்திக்காக போரிடும் ஒரு ராணுவ வீரரும் அவர்களிடமில்லை. கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்.


Sridhar
அக் 22, 2024 14:44

உண்மையாலுமேவா?


hari
அக் 22, 2024 16:39

ஆமாம் வாசகரே


Firstindyan
அக் 22, 2024 10:38

மோடியின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள்.


Sankare Eswar
அக் 22, 2024 06:36

அருமை.. மதிநுட்பமான உளவியல் ரீதியான அமைதி பேச்சு வார்த்தைக்கு இந்தியாவிற்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி. ஜெய்ஹிந்த்.


Kasimani Baskaran
அக் 22, 2024 05:56

சீனாவின் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்து விட்டது. ஆகவே அடுத்து சீனாவில் மாற்றங்களை பார்க்கலாம்.


J.V. Iyer
அக் 22, 2024 04:56

என்ன செய்தாலும் இந்த கம்யுனிச சீன அரசை நம்பக்கூடாது. அமெரிக்க டெமாக்ரடிக் காட்சியைப்போல விஷம். ஆனாலும் பாஜக, மோடிஜி இதற்கெல்லாம் ஏமாறமாட்டார்கள் என்று நம்புவோம்.


Priyan Vadanad
அக் 22, 2024 01:06

இந்தோ சீனா உறவு குறித்து, திரு ராகுலை பற்றி கருத்துப்பிழை பதிவிடும் திரு மோடி பக்தர்கள் இப்போதாவது ராகுலை பற்றி தெளிவு பெறவேண்டும். சீனாவுடன் நல்லுறவு எல்லோருக்குமே நல்லது.


Dharmavaan
அக் 22, 2024 07:54

ராஜிவ் நிதிக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு இந்தியாவை திறந்துவிடும் திருட்டுத்தனம் ராகுல்கான் செயல் சீனாவுக்கு அடிமைத்தனம்


RAMAKRISHNAN NATESAN
அக் 22, 2024 10:40

சீனாவுடன் மட்டுமல்ல எந்த நாட்டிடமும் நல்லுறவு அவசியம் என்பதை மோடி தலைமையிலான ஆட்சி எப்போதும் உணர்ந்துள்ளது .... மக்கள் உணர்ந்துள்ளனர் ... சங்கிகள் உணர்ந்துள்ளனர் ... சீனாவுடன் இருக்கும் பகை நெருப்பு அணைந்துவிடக்கூடாது என்று ஆசைப்படும் காங்கிரஸ், திமுக கட்சிகள் மற்றவர்களது அடிமைகள் உணரவில்லை ... இந்தியா இந்தியப்பகுதிகளை விட்டுக் கொடுத்துவிட்டது .... ஆக்கிரமிப்புகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது என்று உங்களைப் போன்றவர்கள் எழுதிய கருத்துக்களைப் படித்த அனுபவம் எங்களுக்கு உண்டு ....


hari
அக் 22, 2024 11:00

what Rahul did here .....don't bluff kothadimaya


N.Purushothaman
அக் 22, 2024 13:02

திராவிட அறிவுக்காரனுக்கு மூளை எப்படி வேலை செய்யுதுன்னு பார்த்தால் கர்ண கொடூரமா இருக்கு ...


Anand
அக் 22, 2024 17:45

ரவுளெல்லாம் ஒரு ஆளுன்னு அவருக்கும் இவ்விடம் சம்பந்தமே இல்லாமல் ஒருவன் முட்டுக்கொடுக்கிறான்......


Sudhir
நவ 17, 2024 20:03

உறவு என்பது வேறு அடிமைத்தனம் என்பது வேறு . ராகுலின் வழி இரண்டாவது.


சமீபத்திய செய்தி