உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆமதாபாத் விமான விபத்து: போயிங் விமானங்களின் எரிபொருள் சுவிட்ச் பிரச்னையை 2018ம் ஆண்டில் கண்டறிந்தது அமெரிக்கா!

ஆமதாபாத் விமான விபத்து: போயிங் விமானங்களின் எரிபொருள் சுவிட்ச் பிரச்னையை 2018ம் ஆண்டில் கண்டறிந்தது அமெரிக்கா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 2018ம் ஆண்டில் சில போயிங் 737 ஜெட் விமானங்களில் எரிபொருள் சுவிட்ச் சிக்கலை அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் அடையாளம் கண்டறிந்தது. ஆனால் ஆய்வு செய்ய ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிடவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.குஜராத்தின் ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்தின் முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியானது. மொத்த 15 பக்க அறிக்கையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு இன்ஜின்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு தான் அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதில் அளித்துள்ளார்.இந்நிலையில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது, 2018ம் ஆண்டில் சில போயிங் 737 ஜெட் விமானங்களில் எரிபொருள் சுவிட்ச் சிக்கலை அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் அடையாளம் கண்டறிந்துள்ளது என்ற தகவல் கவனம் பெற்று உள்ளது.டிசம்பர் 2018ம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்த அறிக்கைப்படி, சில போயிங் 737 விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் ஒரு தவறான பூட்டுதல் அம்சம் இருக்கிறது. இது பாதுகாப்பற்றது என்று கூறப்பட்டது. ஆனால் ஆய்வு செய்ய ஏர் இந்தியா விமானம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த சுவிட்சுகள் விமானத்தின் இஞ்சின்களுக்குள் எரிபொருள் ஓட்டத்தை ஒழுங்குபடுத்து கின்றன. தரையில் உள்ள இஞ்ஜின்களை இயக்க அல்லது நிறுத்த விமானிகள் இவற்றைப் பயன்படுத்துகின்றனர். வானில் இஞ்ஜின் செயலிழந்தால் இஞ்ஜின்களை இயக்க அல்லது மறுதொடக்கம் செய்யவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் அறிக்கை அறிவுறுத்தலாக இருந்தாலும் பரிந்துரைக்கப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ள ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிடவில்லை என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

என்றும் இந்தியன்
ஜூலை 18, 2025 16:33

Emergency Fuel Shutoff: Aircraft have emergency fuel shutoff tems EFSO designed to rapidly and reliably stop fuel flow in emergencies, such as a fire or explosion. External Access: These EFSO valves can be located in various places, including the wings or fuselage, and some can be operated from outside the aircraft. Purpose: The primary purpose is to allow ground personnel to quickly isolate the fuel supply to the engine in situations where the cockpit controls are inaccessible or malfunctioning. Examples: While not all aircraft have externally accessible fuel shutoff valves, they are common on larger commercial and military aircraft So it was closed by SOMEBODY EXTERNALLY PURPOSEFULLY DURING INSPECTION / CLEANING OF THE AIRCRAFT EXTERNALLY and that is why with the available fuel in the pipeline from that shut off valve place to engine plane flew and fell down immediately. Who closed it???Only the maintenance Staff by somebodys instruction. Who closed it??? For what???Who instructed???


Ilayaraja Boopathy
ஜூலை 14, 2025 12:38

The probability of fuel switch not switched on is also to be checked. As the remaining fuel in the pipeline may be used till takeoff till accident happened


அப்பாவி
ஜூலை 13, 2025 07:02

செலவைப் பாக்காம மிச்சம் இருக்கிற விமானங்களை ஆய்வு செய்யுங்க. பின்னாடி கட்டணத்தை ஏத்தி உருவிடலாம்.


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 12, 2025 22:58

பிரச்சினை 2018லேயே கண்டுபிடிச்சோமுன்னு சொன்னாங்க. இதையே 2014க்கு முன்பு ஏதாவது ஒரு வருடத்தை சொல்லயிருந்தால், நேருவின் இருந்து தெருவில் இருக்கும் எல்லா காங்கிரஸ்காரனையும் கழுவி ஊத்தியிருப்பாங்க .


Sudha
ஜூலை 12, 2025 21:33

ஒரு வருஷத்திற்கு அமெரிக்காவிடமிருந்து எதுவும் வாங்காமல் இருந்தாலே போதும்


Sudha
ஜூலை 12, 2025 21:32

2018ன் விமான துறை அமைச்சர்? ஆனால் அதன் பிறகு இத்தனை ஆண்டுகள் எந்த விபத்தும் நிகழாமல் எப்படி முடிந்தது?


அப்பாவி
ஜூலை 12, 2025 19:41

இப்ப புரியுதா இந்தியாவில் எல்லாமே சீப்பா குடுப்பாங்க. விமானம் வாங்கினதிலிருந்து ஒரு ஆய்வும் கிடையாது.


Raja
ஜூலை 12, 2025 19:20

அனைத்து கார்களிலும் ஒரு பிரச்சனை ஏற்பட்டால் அந்த காரின் நிறுவனம் அனைத்து கார்களையும் திரும்ப பெற்று அந்த பிரச்சனையை சரி செய்து உரிமையாளரிடம் ஒப்படைப்பார்கள். சில உரிமையாளர்கள் பிரச்சனையை சரி செய்ய நிறுவனத்திடம் ஒப்படைக்க மாட்டார்கள். அந்த பிரச்சனையுடனேயே அந்த காரை வைத்து ஓட்டிக் கொண்டிருப்பார். அந்த பிரச்சனையால் விபத்து ஏற்பட்டால உரிமையாளரே பொறுப்பாவார். ஆனால் விமானத்தில் அவ்வாறு விபத்து ஏற்பட்டால் விமானம் தயாரித்த நிருவனத்திற்கே முக்கிய பங்கு உள்ளது. இவ்வாறு குறைபாடு கண்டறியப்பட்ட விமானங்களை பறக்க FAA தடை விதிக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை