உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏ.ஐ. உதவியுடன் இலக்கை தானாக கண்டறியும் தொழில்நுட்பம்: இந்திய ராணுவ அதிகாரி சாதனை

ஏ.ஐ. உதவியுடன் இலக்கை தானாக கண்டறியும் தொழில்நுட்பம்: இந்திய ராணுவ அதிகாரி சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : ராணுவ அதிகாரி உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ரேடாரில் இலக்குகளை தானாக கண்டறியும் அமைப்புக்கு இந்திய ராணுவம் காப்புரிமை பெற்றுள்ளது.ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, பல்வேறு துறைகளிலும் எதிரொலித்து வருகிறது. வேலைவாய்ப்புகளை ஏஐ தொழில்நுட்பம் பறித்துக் கொள்ளும் என்ற கவலை ஒரு புறம் இருந்தாலும் அதனை பயன்படுத்தி பல முக்கியமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.தற்போது ராணுவமும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த துவங்கி உள்ளது. இந்திய ராணுவத்தின் கர்னல் குல்தீப் யாதவ் என்பவர், ஏஐ உதவியுடன் ரேடார் மூலம் இலக்குகளை தானாக கண்டறியும் அமைப்பு ஒன்றை உருவாக்கி உள்ளார். இதற்கு ராணுவம் காப்புரிமை பெற்றுள்ளது. இந்த புதுமையான கண்டுபிடிப்பானது, மனிதர்களின் தலையீடு இல்லாமல் ரேடார் மூலம் இலக்குகளை தானாக கண்டறிந்து வகைப்படுத்தி விடும். இதன் மூலம் ராணுவத்தின் பணி மேலும் வேகம் பெறும்.தொழில்நுட்பத்துறையில் சுயசார்பை வலுப்படுத்துவதற்கும், பாதுகாப்பு துறையின் தன்னிறைவு இந்தியா என்ற உறுதிப்பாட்டுக்கும் கர்னல் குல்தீப் யாதவின் புதுமையான கண்டுபிடிப்பு வலுச்சேர்க்கிறது என ராணுவம் பெருமிதம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Padmasridharan
செப் 12, 2025 05:17

சாமியோவ், அங்க ராணுவ அதிகாரிகள் பெருமைகள் சேர்த்துக்கொண்டிருக்க இங்கே காவலர்கள் அதிகார பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றனர் மக்களை ஏமாற்றி, அதட்டியும் மிரட்டியும்


ராமகிருஷ்ணன்
செப் 11, 2025 06:35

பாகிஸ்தானின் வயிற்றில் புளியைக் கரைத்தது இருக்கும்.. அவர்களின் தீவிரவாதிகள் நடமாட்டத்தை விண்ணில் இருந்து கண்காணித்து தானாக போட்டு தள்ளும் ஆயுதங்களை எல்லைகளில் நிறுவ வேண்டும்.


Kasimani Baskaran
செப் 11, 2025 04:14

குல்தீப் யாதவ்க்கு பாராட்டுகள். அதே சமயம் அவரது பாதுகாப்புக்கு அரசு ஆவண செய்ய வேண்டும்.


ManiMurugan Murugan
செப் 10, 2025 22:25

வாழ்த்துக்கள்


Varadarajan Nagarajan
செப் 10, 2025 22:10

வாழ்த்துக்கள். நமது பிரதமர் மோடியின் தலைமையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ராணுவம் தன்னிறைவு அடைந்து ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது. நமது ராணுவத்தின் போர்திறனும் புதிய தளவாடங்கள் திறமையும் சமீபத்திய ஆபரேஷன் சிந்தூர் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகள் நமது ராணுவத்தை மேலும் நவீனமயமாக்கும். வந்தே பாரதம், ஜெய் ஹிந்த்


Balaji Radhakrishnan
செப் 10, 2025 20:57

Congratulations to Mr. Yadav. Well done You done the great job.


Naga Subramanian
செப் 10, 2025 20:32

ஜெய் ஹிந்த் வெல்க பாரதம் வாழிய பாரதம் தாய் மண்ணே வணக்கம்


சமீபத்திய செய்தி