உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏ.ஐ., கட்டுப்பாட்டு அறை திருப்பதியில் திறப்பு

ஏ.ஐ., கட்டுப்பாட்டு அறை திருப்பதியில் திறப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பக்தர்களுக்கான ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று திறந்து வைத்தார். ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் சராசரியாக 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். பண்டிகைகள், விடுமுறை நாட்கள் போன்ற சமயங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். பக்தர்களின் தரிசன அனுபவத்தை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், நாட்டிலேயே முதன் முறையாக கோவிலில் ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை அமைத்துள்ளனர். இது, கூட்ட நெரிசலை முன்கூட்டியே கணிக்கும்; பக்தர்கள் வரிசைகளை வேகமாக்கும் அதிகாரிகளால் உடனடியாக தகவல்களை அணுக முடியும். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்த மையத்தை துவக்கி வைத்தார். வைகுண்டம் க்யூ காம்பிளக்ஸ் - 1-ல் அமைந்துள்ள இந்த மையம், நவீன கேமராக்கள், முப்பரிமாண வரைபடம், நேரடி டிஜிட்டல் தகவல் திரை ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டு, தொழில்நுட்ப நிபுணர் குழுவால் நிர்வகிக்கப்பட உள்ளது. இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், 'முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருமலையில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்தார். 6,000-க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் திருமலையை கண்காணிக்கின்றன. இந்த அமைப்பு நிமிடத்திற்கு 3.6 லட்சம் தரவுகளை அளிக்கும்' என கூறப்பட்டுள்ளது. முன்னதாக திருப்பதி வந்த துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடன் இணைந்து சுவாமி தரிசனம் செய்தார். மேலும், 102 கோடி ரூபாய் செலவில், 4,000 பக்தர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்ட புதிய மண்டபத்தை இருவரும் இணைந்து திறந்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
செப் 26, 2025 10:42

எம்பி எம்எல்ஏ சிபாரிசு கடித தரிசனம் நியாயமற்றது. விஐபி க்கள் அவரவர் ஊர் ஆலயங்களிலேயே வழிபாடு செய்யலாம்.


Kasimani Baskaran
செப் 26, 2025 03:58

செயற்கை நுண்ணறிவு என்பது உணர்ச்சியில்லாதது. மனிதனைப்போல சிந்திக்க முயலுமே தவிர - முழுவதும் சாத்தியமில்லை. கூட்டம் அதிகம் வரும் என்பதை அது சொல்லவில்லை என்றால் இவர்கள் என்ன செய்வார்கள்?


Ramesh Sargam
செப் 26, 2025 02:19

நாயுடு அவர்கள் முதலில் இந்த VIP, VVIP மற்றும் சிபாரிசு தரிசனத்தை நிறுத்தவேண்டும். அப்படி நிறுத்தினாலே, மற்ற பொதுவான பக்தர்களுக்கு சிரமமில்லா தரிசனம் கிடைக்கும்.


Vasan
செப் 26, 2025 07:10

ஐயா, உங்கள் கோரிக்கை நடைமுறை சாத்தியத்திற்கு அப்பாற்பட்டது என்பது என் தாழ்வான அபிப்பிராயம். ஒரு VVIP எப்படி கூட்டத்துடன் வரிசையில் சில மணி நேரம் இருக்க முடியும்? கூட்டத்தில் நெரிசல் ஏற்படுமே அதில் சில பலருக்கு காயம் ஏற்படுமே துப்பாக்கி ஏந்திய காவலர்கள் அவருடன் கூட இருப்பார்களே அது மற்றவர்களுக்கும், குழந்தைகளுக்கும் அச்சுறுத்துமே எனவே தனித்தனி நடைவரிசை இருப்பது நல்லதே. என் கருத்திற்கு எதிர்மறை கருத்து இருப்பின் தயவு செய்து பதிவு செய்யவும்.


Ramesh Sargam
செப் 26, 2025 11:45

திரு வாசன் ஐயா அவர்களுக்கு, ஹைதெராபாத் நகரம் அருகில் சிலுகூர் பெருமாள் கோவில் உள்ளது. அதற்கு விசா பெருமாள் கோவில் என்றும் ஒரு பெயர். ஏன் என்றால் அந்த கோவில் பெருமாளுக்கு வேண்டிக்கொண்டு நூறுமுறை வலம் வந்தால் விசா கிடைக்கும் என்று நம்பிக்கை பக்தர்களிடையே. நாம் நம் விஷயத்துக்கு வருவோம். அந்தக்கோவில் வெளியே ஒரு நோட்டீஸ் போர்டு இருக்கும். அதில் இந்த கோவிலில் VIP, VVIP தரிசனம் கிடையாது. எல்லோரும் ஒரே கியூவில் வந்து தரிசனம் செய்யவேண்டும் என்று எழுதியிருக்கும். கோவில் நிர்வாகமும் அதை மிகவும் கடுமையாக நிறைவேற்றுகிறது. ஆகையால் VIP, VVIP தரிசனமுறையை நிறுத்துவது சாத்தியமே. வணக்கம். என் கருத்துக்கு மறுக்கறுத்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை