உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏர் இந்தியா பெண் விமானி தற்கொலை: காதலன் கைது

ஏர் இந்தியா பெண் விமானி தற்கொலை: காதலன் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ஏர் இந்தியாவில் பணியாற்றிய பெண் விமானி தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக காதலனை போலீசார் கைது செய்தனர்.தற்கொலை செய்து கொண்ட ஸ்ருஷ்டி துலி(25) உ.பி.,யை சேர்ந்தவர். ஏர் இந்தியாவில், விமானியாக பணியாற்றி துவங்கியது முதல் மும்பையின் அந்தேரி கிழக்குப் பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். டில்லியில் பயிற்சிக்காக சென்ற போது, ஆதித்யா பண்டிட் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது.கடந்த 25ம் தேதி வரை இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். அன்றைய தினம் காரில், ஆதித்யா டில்லி சென்றுள்ளார். அப்போது அவரை மொபைல்போனில் அழைத்த ஸ்ருஷ்டி, தற்கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார்.இதனையடுத்து மீண்டும் ஆதித்யா வீட்டிற்கு வந்த போது கதவு பூட்டப்பட்டு இருந்தது. நண்பர் ஒருவர் உதவியுடன், கதவை திறந்து சென்ற போது ஸ்ருஷ்டி, டேடா கேபிளில் தூக்கு போட்டுக் கொண்டது தெரிந்தது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பரிசோதனை செய்த டாக்டர்கள், ஸ்ருஷ்டி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது தொடர்பாக ஸ்ருஷ்டியின் உறவினர் போலீசில் புகார் தெரிவித்தார். அதில் ஆதித்யா பண்டிட், ஸ்ருஷ்டியை மோசமாக நடத்தி துன்புறுத்தியதுடன் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டினார். இதனையடுத்து ஆதித்யா பண்டிட்டை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Krishnamurthy Venkatesan
நவ 28, 2024 20:06

She destroyed her parents dreams. Her education and job did not give her/taught courage to throw away that idiot. Before committing suicide, she should have thought her brothers/sisters and parents. A thorough probe will bring the exact reasons.


S. Gopalakrishnan
நவ 27, 2024 23:43

இந்தப் பெண்ணை விமானியாக்குவதற்கு வீட்டை விற்று இரண்டு கோடி ரூபாய் சிலவு செய்த அப்பா பைத்தியக்காரன் !


Azar Mufeen
நவ 27, 2024 22:15

தொட்டதுக்கெல்லாம் மதம் சம்பந்தபட்ட கருத்துக்கள் தானா? கடவுளை ஒதுக்கி வைத்துப்பாருங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்


rama adhavan
நவ 27, 2024 21:56

இந்த காதல், கத்திரிக்காய் எல்லாம் எதற்கு?


kalyan
நவ 27, 2024 21:32

அன்பான ஆண்களே காதலிக்கும் முன்பு தாம் காதலிக்க இருக்கும் பெண்ணின் மன நிலை பற்றி நன்கு அறிந்தபிறகு காதலை வெளிப்படுத்தவோ சேர்ந்து வாழவோ முடிவெடுக்கவும் . இல்லையென்றால் சிறிய சிறிய சண்டைகளுக்கு மனமொடிந்து பெண் தற்கொலை செய்ய நேரிட்டால், உங்கள் எதிர்காலம் வீணாகி விடும் . துன்பப்படும் உறவினர்கள் பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்ததை எண்ணி பழிவாங்க கட்டாயம் காதலித்த நபர் மேல் புகார் கூறுவார்கள் . அது இல்லை என்று நிரூபிக்க பல நாட்கள் ஆகி விடுதலை ஆனாலும் அத்தனை நாட்கள் ஜெயிலில் களி உண்ணவும் மன உளைச்சல் படவும் வேண்டுமே ?


Nallavanaga Viruppam
நவ 27, 2024 21:24

தாலிபான், ஈரானில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைத்து சாதனை படைத்தது இருக்கிறானுகளே தெரியுமா? நீங்க எல்லாம் பெண்களுக்கு ஆதரவாக பேசும் போது சிரிப்பை அடக்க முடியல.


aaruthirumalai
நவ 27, 2024 21:03

அபூர்வமான பணிவாய்ப்பு அதன் சிறப்பை அரியாதவர்.


சம்பா
நவ 27, 2024 20:46

படிப்பு திறமை எல்லாம் இருந்து என்ன பயன்? தவறான முடிவு


S. Gopalakrishnan
நவ 27, 2024 21:28

பெண் குழந்தைகள் பெற்றோருக்கு அடங்கி அவர்கள் சொல்லும் மாப்பிள்ளையை‌ மணமுடிக்க வேண்டும். இதென்ன கலியாணம் ஆகும் முன் சேர்ந்து வாழ்வது ? கலி காலம் !


Matt P
நவ 28, 2024 09:20

இப்போ தானே தொடங்கியிருக்காங்க. கலாச்சாரத்தை ...இன்னும் ஆண்டுகள் போக போக இன்னும் மோசமாகலாம். மேற்கத்திய நாடுகள் கலாச்சாரம் மாறாது அநேகமாக அப்படியே தான் இருக்கும். இப்படி ஆகுமென்று ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்னே தெரிந்தது தான். ...சீர் திருத்தம் பெண்ணுரிமை தன்மானம் அடுப்பூத வேண்டாம் படிப்பு வூதுங்கள் ..என்றார்கள் . அதுக்காக இப்படியா? எவ்வளவு தான் படித்தாலும் சிந்தனை வேண்டும் இருபாலாருக்கும்.


Barakat Ali
நவ 27, 2024 20:33

நூலிபன் வேலை போலிருக்கே ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை