உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சென்னையில் ஏர் இந்தியா விமானம் புறப்படுவதில் தாமதம்; பயணிகள் 4 மணி நேரம் காத்திருப்பு

சென்னையில் ஏர் இந்தியா விமானம் புறப்படுவதில் தாமதம்; பயணிகள் 4 மணி நேரம் காத்திருப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம் 4 மணி நேரம் தாமதமானதால், பயணிகள் ஆத்திரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னையில் இருந்து அந்தமானுக்கு இன்று காலை 7.20 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்படுவதாக இருந்தது. இதற்காக, காலை 6 மணிக்கு பயணிகள் அனைவரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். ஆனால், அந்தமான் பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், 158 பயணிகளும் விமான நிலையத்தில் காக்க வைக்கப்பட்டுள்ளனர். 11 மணிக்குப் பிறகே விமானப் புறப்பட்டு செல்லும் என்று கூறினர். இதனால் ஏர் இந்தியா விமான அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிற விமானங்கள் எந்தவித தடையின்றி அந்தமானுக்கு சென்றடைந்த நிலையில், ஏர் இந்தியா விமானத்திற்கு மட்டும் வானிலை தடையாக உள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலளித்த அதிகாரிகள், இது பெரிய ரக விமானம் என்பதால் வானிலை சரியாக இருக்க வேண்டியது அவசியம் என்று கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி