உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏஐ மூலம் ஆபாச வீடியோ; ரூ.4 கோடி கேட்டு யூடியூப் மீது நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கு

ஏஐ மூலம் ஆபாச வீடியோ; ரூ.4 கோடி கேட்டு யூடியூப் மீது நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஏஐ மூலம் ஆபாசமாக வீடியோக்கள் உருவாக்கி வெளியிடப்பட்டது தொடர்பாக, யூடியூப் மற்றும் கூகுள் நிறுவனங்களிடம் ரூ.4 கோடி இழப்பீடு கேட்டு நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதி டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இந்திய சினிமாவில் நட்சத்திர ஜோடிகளில் ஒருவராக இருப்பவர் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதி. இவர்கள் தங்களின் போட்டோக்களை பயன்படுத்தி ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆபாசமான வீடியோக்கள் உருவாக்கப்பட்டதாகக் கூறி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இத்தகைய வீடியோக்கள் யூடியூப் மூலம் பரப்பப்பட்டுள்ளன. இதற்கு காரணமான யூடியூப் மற்றும் கூகுள் நிறுவனங்களிடம் ரூ.4 கோடி இழப்பீடு கேட்டு ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த செப்.,6ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது; தங்களைப் பற்றிய அவதூறு வீடியோக்களை முழுதும் நீக்க வேண்டும். அதேபோல, இதுபோன்று ஏஐ மூலம் உருவாக்கப்படும் ஆபாச வீடியோக்களை பதிவிடுவதை தடுக்க, யூடியூப் நிறுவனத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். குறிப்பாக, தங்களின் பெயர்கள், குரல்கள் மற்றும போட்டோக்களை ஏஐயால் தவறாக பயன்படுத்த முடியாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த வேண்டும், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், குறிப்பிட்ட ஒரு யூடியூப் சேனலில் நடிகர்கள் சல்மான் கான், அபிஷேக் பச்சன் நடிகைகள் பூஜா ஹெக்டே, ஐஸ்வர்யா ராய் உள்பட பல பிரபலங்களின் 250க்கும் மேற்பட்ட டீப் பேக் வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளன. இந்த வீடியோக்கள் மொத்தம் 1.65 கோடி பார்வைகளைக் கொண்டுள்ளது. இதில், சல்மான் கானுடன் ஐஸ்வர்யா ராய் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோக்கள் ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்டு இருப்பதை தங்கள் மனுவில் தம்பதி குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Barakat Ali
அக் 02, 2025 20:28

வழக்கு போட்டுட்டாங்க ......


என்றும் இந்தியன்
அக் 02, 2025 17:45

எனக்கு வருமானம் இல்லாததால் ரூ 4 கோடி வேண்டும், பிறகு இன்னும் இந்த மாதிரி வீடியோ வந்தால் வருடத்திற்கு ரூ 1 கோடி தரவேண்டும் - இப்படிக்கு வேலையில்லா ஐஸ்வர்யா ராய்


Rajinikanth
அக் 02, 2025 19:02

உங்கள் வீட்டிலுள்ள ஒருவருக்கு இதுபோல நடந்தால், அதன் வலியை உணருவீர்கள்


Natchimuthu Chithiraisamy
அக் 02, 2025 15:56

ஓல்ட் போட்டோக்களை பயன்படுத்தி இருப்பார்கள். அதற்க்கு நஷ்டஈடு கோர்ட் கொடுக்காது


Subburamu K
அக் 02, 2025 14:47

Severe punishments must be imposed to the youtubers misusing the media. You tube also take responsibility in preventing such videos depicting personal life. There is no 100 percent independence to youtubes, requires restrictions


புதிய வீடியோ