உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யோகி ஆதித்யநாத் Vs அகிலேஷ் யாதவ்; போர்க்களமானது லக்னோ!

யோகி ஆதித்யநாத் Vs அகிலேஷ் யாதவ்; போர்க்களமானது லக்னோ!

லக்னோ: சுதந்திர போராட்ட வீரர்களை பா.ஜ., அவமதிப்பதாகவும், ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஜெயந்தி விழாவையொட்டி, லக்னோவில் உள்ளசர்வதேச மையத்தில் (ஜே.பி.என்.ஐ.சி., ) உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்த மையத்திற்குள் யாரும் நுழைய முடியாதபடி, தகர சீட்டுக்களால் மூடி மறைக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அகிலேஷ் யாதவ், நேற்று இரவு சம்பவ இடத்திற்கு நேரில் சென்றார். அவருடன் நூற்றுக்கணக்கான சமாஜ்வாதி கட்சியினரும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a1zkks34&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால், போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், பா.ஜ.,வுக்கும், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் எதிராக கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். மேலும், அங்கு தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது.இதையடுத்து அசம்பாவிதம் தவிர்க்க, அகிலேஷ் வீடு, சமாஜ்வாதி கட்சி அலுவலகம், முக்கிய சாலை சந்திப்புகள், ஜே.பி.சர்வதேச மையம் ஆகிய இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது, பேசிய அகிலேஷ் யாதவ், தகர சீட்டுகளை வைத்து நிறுத்தி பா.ஜ., அரசு எதையோ மறைக்க நினைப்பதாகவும், ஜே.பி.என்.ஐ.சி., சமத்துவத்தின் அடையாளம் என்றும் கூறினார். மேலும், இந்த மையத்தை விற்பதற்கோ அல்லது யாருக்கோ கொடுப்பதற்கோ தயாராகி இருப்பதாகவும், சுதந்திர போராட்ட வீரர்களை பா.ஜ., அவமதிப்பதாகக் கூறி அவர், ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார். இதனிடையே, அகிலேஷ் யாதவின் வருகையையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கையாக இதுபோன்று தடுப்புகள் அமைக்கப்பட்டதாக லக்னோ மேம்பாட்டு துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதேவேளையில், அகிலேஷ் யாதவின் இந்த செயல் குழந்தைத் தனமானது என்றும், 'சமாஜ்வாதி கட்சி பியூஸ் போன டிரான்ஸ்பார்மர்' என்றும் பா.ஜ., விமர்சனம் செய்துள்ளது.கடந்தாண்டும் இதேபோன்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்த நாளுக்கு மரியாதை செலுத்த விடாமல் தடுத்து விட்டதாக, பா.ஜ., அரசு மீது சமாஜ்வாதி கட்சியினர் குற்றம் சாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Parasumanna Sokkaiyer Kannan
அக் 12, 2024 10:40

Totally indian politicians are showing only gimmicks and not any policy decisions to change the fate of the common people.


தாமரை மலர்கிறது
அக் 12, 2024 00:25

அவருக்கு மரியாதை செலுத்த விரும்பும் அகிலேஷ் ஒரு பியூஸ் போன பல்பு.


ஆரூர் ரங்
அக் 11, 2024 18:54

ஜேபி தன் வாழ்நாளில் அழிக்க வேண்டும் எனப் போராடிய ஊழல் இந்திரா காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொஞ்சும் அகிலேஷுக்கு ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அருகதையேயில்லை.


Sundar R
அக் 11, 2024 17:55

Samajwadi is a party of disillusionment. Caste politics of Akhilesh Yadav failed completely in the last 4 elections. God saved UP from the ill effects of Akhilesh Yadav because election nowadays in UP is people-driven and not party-led.


vikram
அக் 11, 2024 15:05

அகிலாஸ் பிராடு


Rpalnivelu
அக் 11, 2024 14:40

உபி குடும்ப வாரிசு கட்சியை சேர்ந்த அகிலேஷ் ஒரு மோசடிப் பேர்வழி. பதவி போனபின் அரசு மாளிகையிலிருந்து ஒரு பொருள் விடாமல் சுருட்டியவன். அரசு இயந்திரத்தை த்ரவிஷன்கள் போல் நாசம் செய்த படுபாவி


nagendhiran
அக் 11, 2024 13:01

மகா நடிகன்?


Lion Drsekar
அக் 11, 2024 12:30

ஒருவர் சம்சாரி ஒருவர் பூசாரி இருவரும் மக்களுக்கு தொண்டாற்ற வந்திருப்பவர்கள் , சாராய ஆலைகளை துவங்குங்கள் ஒருவர் விற்றால் மற்றொருவர் தயாரிக்கலாம் பல லட்சம் கோடி வருவாய், பிரித்துக்கொள்ளலாம் சண்டை வராது, சண்டை போடுவது போல் போட்டுக்கொள்ளலாம், இங்கு யாரும் எதுவுமே கேட்கமாட்டார்கள் அவரவர்கள் அன்றாடம் வியர்வை சிந்தி உழைத்து, எதிர்காலத்துக்கு சேமிக்கிறார்களோ இல்லையோ அரசுக்கும் , மக்கள் பிரநிதிகளுக்கும் அவர்கள் வாழ வீட்டு வரி, மின்சார வரி, குடிநீர் வரி, சாலை வரி, டீசல் வரி, வியாபார வர பொருள் வாங்கினால் வரி, ஹோட்டலில் சாப்பிட்டால் வரி, பொருள் தயாரித்தால் வரி என்று வரி கட்டுவதற்கு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருக்கும்போது , யாருக்கும் எதைப்பற்றியும் சிந்திக்கும் நேரமில்லை ஆகவே நீங்களே ராஜா நீங்களே மந்திரிகள் , உங்கள் காட்டில் அமுக்க மழைதான் , நீங்கள் செய்வது ஒன்றே ஒன்று எந்த காரணம் கொண்டும் மக்கள் முதுகில் சுமை ஏற்றப்பட்டுக்கொண்டு இருபப்தை அவர்கள் அறியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் . அதுதான் சுதந்திரம் பெற்றதன் பயன், அப்போதுதான் சுதந்திரத்துக்குப் பிறகு வாழ்ந்த கட்சிகளின் தியாகிகளின் ஆன்மா சாந்தி சாந்தி அடையும் ஹிரண்யாய நமஹ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை