உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் ஆட்சிக்கு வந்தால் மது விலக்கு ரத்தாகும்: பிரசாந்த் கிஷோர் கட்சி அறிவிப்பு

பீஹாரில் ஆட்சிக்கு வந்தால் மது விலக்கு ரத்தாகும்: பிரசாந்த் கிஷோர் கட்சி அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: 'பீஹாரில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போது அமலில் உள்ள மதுவிலக்கை நீக்குவோம்' என, பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தெரிவித்துள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. பீஹாரில், 2016 முதல் மது விலக்கு அமலில் உள்ளது. இந்நிலையில், பீஹாரைச் சேர்ந்த தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியில் லோக் ஜன் சக்தி ராம் விலாஸ் பிரிவைச் சேர்ந்த குமார் சவ்ரவ் நேற்று இணைந்தார். நிகழ்ச்சியில், ஜன் சுராஜ் கட்சியின் தேசிய தலைவர் உதய் சிங் பேசியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் அமலில் உள்ள மது விற்பனை மீதான தடையை உடனே நீக்குவோம். மது விலக்கு காரணமாக 28,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

chandran
அக் 13, 2025 06:22

அடப்பாவி. தமிழ்நாட்டில் மதுவிலக்கு வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். நீ என்னடா என்றால் மதுவிலக்கை றது பண்ணுவோம் என்கிறாய். உருப்படவே மாட்டாய்.


சிட்டுக்குருவி
அக் 13, 2025 05:54

புதுசா அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடிப்பவர்கள் எல்லாம் மதுவினால் தான் ஜெயிலுக்குப்போறாங்க .இப்பவே முடிவு செய்ஞ்சிட்டிங்கபோல இருக்கு.


சின்னப்பா
அக் 13, 2025 05:20

பிழைக்கத் தெரிந்த பிரசாந்த்…இரண்டாமிடத்திற்கு வாய்ப்பு!


கோமாளி
அக் 13, 2025 05:08

அரசியல் கோமாளி.. 28,000 கோடி மக்களிடம் பிடுங்கி தானே கல்லா கட்டுகிறீர்கள். உங்க அப்பன் வீட்டு வருமானமா போச்சு. மதுவிலக்கால் மறைமுகமாக 50,000 கோடி மிச்சமாகும்


கோமாளி
அக் 13, 2025 05:05

அதிக மக்கள் தொகை உள்ள பீகாரில் அதிக வேலை வாய்ப்பை உருவாக்கி தருவோம் என்று எவனும் சொல்லவில்லை. விட்டால் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கிவிடுவார்கள் போல..


Kasimani Baskaran
அக் 13, 2025 03:56

சாராய சாம்ராட்ஜியத்தை திரும்பவும் நிறுவோம்... தமிழக அரசியலில் இருக்கவேண்டிய கிேஷார் ஆள்... அதுவும் [கிே] என்ற புதிய தமிழ் எழுத்துடன்... பெரியான் தமிழ் சீர்திருத்தம் போல தினமலர் தமிழ் சீர்திருத்தம் போல தெரிகிறது.


visu
அக் 13, 2025 05:23

இங்க கொஞ்ச நாள் வேலை செய்த பழக்க தோஷம் ஆனால் மது விற்பனை மூலம் வருமானம் வரும் ஆனால் குற்றங்கள் பெருகும் அதர்க்கு அந்த வருமானத்தை செலவு செய்யவேண்டியதுதான்


Anonymous
அக் 13, 2025 08:56

சூப்பர், சரியாக சொன்னீர்கள்.


Alphonse Mariaa
அக் 13, 2025 02:30

இன்னும் சில வருடங்களில் முக்கிய நோயாக இருதயம் மற்றும் சக்கரை நோய்களை பின்னுக்கு தள்ளிவிடும் கல்லீரல் செயலிழப்பு நோய்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை