உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவை அந்நியப்படுத்துவது ஆபத்தானது; அமெரிக்காவை எச்சரிக்கிறார் காங் எம்பி சசி தரூர்!

இந்தியாவை அந்நியப்படுத்துவது ஆபத்தானது; அமெரிக்காவை எச்சரிக்கிறார் காங் எம்பி சசி தரூர்!

வாஷிங்டன்: 'இந்தியாவை அந்நியப்படுத்துவது ஆபத்தானது' என அமெரிக்காவை காங்கிரஸ் எம்பி சசிதரூர் எச்சரித்து உள்ளார்.இது தொடர்பாக ஆங்கில நாளிதழுக்கு சசிதருர் அளித்த பேட்டி: அமெரிக்கா இந்தியாவுடனான தனது வரிப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இரு நாடுகளுக்கும் உலகிற்கும் இது மிகவும் அவசியமானது. இந்தியாவை அந்நியப்படுத்துவது ஆபத்தானது.பிராந்திய பாதுகாப்பை சீர்குலைக்கும். சீனா மற்றும் ரஷ்யா போன்ற அமெரிக்க எதிரிகளுடன் இந்தியா நெருங்கிய உறவை ஏற்படுத்த வழி வகுக்கும். இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும். இந்த ஆண்டு இறுதியில் இந்தியா நடத்தவிருக்கும் குவாட் உச்சிமாநாட்டை பலவீனப்படுத்தும்.

ஏற்க முடியாது

இந்தியா வெறும் வர்த்தக கூட்டாளி மட்டுமல்ல. இந்தோ-பசிபிக் பகுதியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. சுதந்திர வர்த்தக பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துங்கள். எந்தவொரு நாடும் அதன் தேசிய நலன்களின் அடிப்படையில் மட்டுமே செய்யக்கூடிய எரிசக்தி தேர்வுகள் அல்லது பாதுகாப்பு கொள்முதல் முடிவுகளுக்காக இந்தியாவைத் தண்டிப்பது எதிர்மறையானது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. வரிகளை அமெரிக்கா முதலில் நீக்க வேண்டும்.

தனிப்பட்ட அழைப்பு

டிரம்பிடமிருந்து பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்வது அவர்களின் விரிசல் அடைந்த உறவுக்கு மீண்டும் அரவணைப்பை அளிக்க உதவும். அதிக வரிவிதிப்புக்கள் முற்றிலும் நியாயமற்றது. 50 சதவீத வரிகள் மிகவும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு சசிதரூர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Palanisamy T
செப் 04, 2025 22:36

நடந்து முடிந்த பெய்ஜிங் மாநாட்டில் சீனா தன் ராணுவப் பலத்தை வெளிப் படுத்தியது குறிப்பாக அமெரிக்காவிற்கு மட்டும் சவால்விட வில்லை. இந்தியாவிற்கும் சேர்த்து விடப்பட்ட மறைமுக சவால். ஒருநாள் இந்த உண்மை தெரிய வரும். இவர் எதையும் சரியாக புரிந்து கொள்ளாமல் அமெரிக்காவை மட்டும் எச்சரிப்பதில் எந்தப் பயன்களும் கிடைக்கப் போவதில்லை. நாளைய சீனாவிற்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தியா இப்போதே தங்களின் ராணுவ பலத்தை மேம்படுத்தி பெருக்கிக் கொள்ள முன்வரவேண்டும்.


Palanisamy T
செப் 04, 2025 22:06

இந்தியாவை யார் அந்நியப்படுத்தினார்கள். இந்தியாவில் இருந்து கொண்டு பேச வேண்டாம். அங்குச் சென்று நேரடியாக பேச வேண்டிய இடத்திலிருந்து பேச முடியுமா என்று பாருங்கள்? அப்போதுதான் உண்மைகள் தெரிய வரும், நியாயமும் கிடைக்கும்.


MUTHU
செப் 04, 2025 19:20

இந்தியர்கள் பெரும்பாலும் அமெரிக்கா கனவுடன் இருப்பவர்கள். நேரடியாய் சொல்வதானால் அமெரிக்கா அடிமைகள். ஆகவே அமெரிக்கா ஒன்றும் கவலைப்படாது.


spr
செப் 04, 2025 18:41

இக்கருத்துக்கள் எந்த நேர்காணலில் சொல்லப்பட்டதெனத் தெரியவில்லை. ஆனால் அவரளித்த ஒரு பேட்டி அண்மையில் இணையத்தில் வெளியானது. அவற்றில் இது போன்ற கருத்துக்கள் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை .அவர் மிக மென்மையாக நாகரீகமாக அவர் சொல்ல வந்தது இதுதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை