உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து பாடுபடணும்; கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிபிஆர் அழைப்பு

அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து பாடுபடணும்; கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிபிஆர் அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வறுமையை ஒழிக்கவும், செழிப்பை அடையவும் அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.டில்லியில், இந்திய கத்தோலிக்க பிஷப்ஸ் மாநாடு (CBCI) ஏற்பாடு செய்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்று சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அமைதி, இரக்கம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்தியாவின் சமூக, கலாச்சார மற்றும் மேம்பாட்டுப் பயணத்தில் கிறிஸ்தவ சமூகத்தின் பங்களிப்பு முக்கியமானது.கல்வி, சுகாதாரம், சமூக சீர்திருத்தம் மற்றும் மனித மேம்பாடு ஆகியவற்றில் கிறிஸ்தவ சமூகத்தின் பணிகள் பாராட்டுக்குரியது.ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களின் கவர்னராக இருந்த காலத்தில், பல கிறிஸ்தவ அமைப்புகளுடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கோவையில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடும் வாய்ப்பு கிடைத்தது. கிறிஸ்துமஸ் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களை மகிழ்ச்சியில் ஒன்றிணைப்பது போல, 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற தாரக மந்திரம் மக்களை இந்தியாவின் பன்முகத்தன்மையைக் கொண்டாட அழைக்கிறது. அதே நேரத்தில் ஒரே தேசமாக ஒற்றுமையாக நிற்க வேண்டும்.வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய அனைவரது பங்களிப்பும் இருக்க வேண்டும். வறுமையை ஒழிக்கவும், செழிப்பை அடையவும் அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். வளர்ச்சிக்கு கூட்டு முயற்சி தேவை. இவ்வாறு சி.பி.ராதா கிருஷ்ணன் பேசினார். இந்த நிகழ்வில் மேற்கு வங்க கவர்னர் சி.வி. ஆனந்த போஸ், இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் (CBCI) தலைவர் பேராயர் ஆண்ட்ரூஸ்,மற்றும் பிற சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
டிச 19, 2025 06:36

இரக்கமான வான்கோழி ஸ்பெஷல் பிரியாணி கிடைக்கும்.


siva
டிச 18, 2025 22:17

தனி மரம் தோப்பாகாது.. ஒற்றுமையை வெற்றி தரும்


சமீபத்திய செய்தி