உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முன்னாள் அக்னி வீரர்களுக்கு பாதுகாப்பு படையில் ஒதுக்கீடு

முன்னாள் அக்னி வீரர்களுக்கு பாதுகாப்பு படையில் ஒதுக்கீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ராணுவத்தின் அக்னிபாத் திட்டத்தில் பணியாற்றி வெளியேறும் வீரர்களுக்கு, மத்திய தொழிற்படை, எல்லை பாதுகாப்பு படை மற்றும் துணை ராணுவப் படையில் இடஒதுக்கீடு மற்றும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும் என அப்படைகளின் தளபதிகள் தெரிவித்தனர்.மத்திய அரசு கடந்த 2022ல் ராணுவத்துக்கான அக்னிபாத் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் 17 - 21 வயதினர், முப்படைகளில் ஏதேனும் ஒன்றில் அக்னி வீரர்களாக சேரலாம். அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் பணி வழங்கப்படும். அதில் 25 சதவீதத்தினர் மீண்டும் ராணுவத்தில் சேர்க்கப்படுவர்.இந்நிலையில் மீதமுள்ள முன்னாள் அக்னி வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த ஆண்டு பாதுகாப்பு படைகளில் இடஒதுக்கீட்டை அறிவித்தது. அவை விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதாக மத்திய தொழிற்படை, எல்லை பாதுகாப்பு படை மற்றும் துணை ராணுவப் படை ஆகியவற்றின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.பாதுகாப்பு படைகளில் உள்ள காலி பணியிடங்களில் 10 சதவீதம் முன்னாள் அக்னிவீரர்களுக்கு ஒதுக்கப்படும். எழுத்துத் தேர்வுக்கான வயது வரம்பில் ஐந்து முதல் மூன்று ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Barakat Ali
ஜூலை 12, 2024 17:40

அக்னி வீரர்கள் ஓய்வு பெற்று பிறகு பணியில் சேர்ந்து அதிலும் ஓய்வு பெற்றபிறகு ஊர் திரும்புவார்கள் .... ஆகவே ஊருக்கு ஊரு தீவிரவாத முகாம்களை நடத்த முடியாது ...... அதன் காரணமாகவே தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு .....


GMM
ஜூலை 12, 2024 06:23

அக்னி வீரர்களுக்கு இட ஒதுக்கீடு முறை திட்டத்தை வலுப்பெற செய்யும். காங்கிரஸ் ஓட்டுக்கு இட ஒதுக்கீடு , சிறுபான்மை அந்தஸ்து வகுத்து, நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்பை குறைத்து. தேசிய மாணவர் படை, அக்னி வீரர்களுக்கு, ராணுவம், போலீசார் தேர்வு, அரசு பணியில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு முதல் மரியாதை பெற வேண்டும்.


selva
ஜூலை 12, 2024 05:32

அக்னி வீரர்கள் தகுதி அடிப்படையில் தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என்றால் அவர்களை நேரடியா பாதுகாப்பு பணியில் சேர்க்கவேண்டியதுதானே மீண்டும் ஏன் தேர்வு அப்புறம் ஒதுக்கீடு


மேலும் செய்திகள்





புதிய வீடியோ