உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகர் அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது ஐகோர்ட்

நடிகர் அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: புஷ்பா 2 திரைப்படம் பார்க்கச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி தெலுங்கானா ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா-2 படம் வசூலில் இமாலய சாதனையை படைத்து வருகிறது. இந்தப் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா எனும் தியேட்டருக்கு வந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z10top95&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எந்தவித முன்னறிவிப்புமின்றி வந்த அல்லு அர்ஜூனைக் காண கூட்டம் அலைமோதியது. இதனால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, ரேவதி என்கிற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதைத் தொடர்ந்து. அத்தியேட்டரின் உரிமையாளர், மேனேஜர், உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அது மட்டுமல்லாமல் அல்லு அர்ஜுன் மீதும் போலீசார்வழக்கு பதிவு செய்தனர்.இதனிடையே, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அல்லு அர்ஜூன் அறிவித்தார். மேலும், படக்குழுவினர் அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு உதவுவார்கள் என்று அறிவித்தார். அதோடு, தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் நடிகர் அல்லு அர்ஜூன் மனு தாக்கல் செய்தார்.இந்த நிலையில், ஹைதராபாத்தில் இன்று நடிகர் அல்லு அர்ஜூனை போலீசார் கைது செய்தனர். தெரிந்தே மரணத்தை விளைவித்தல், திட்டமிட்டு கொடுங்காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அல்லு அர்ஜூன் கைது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ஜாமின்

இந்நிலையில் இடைக்கால ஜாமின் கேட்டு, அல்லு அர்ஜூன் தெலுங்கானா ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். இதனை அவசரமாக விசாரிக்க வேண்டும் எனக்கூறியிருந்தார். இதனை ஏற்று அவசர வழக்காக விசாரித்த ஐகோர்ட், அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. நீதபதி தனது உத்தரவில், நடிகர் என்பதற்காக, வாழ்வதற்கான உரிமையை அவரிடம் இருந்து பறிக்க முடியாது. மனுதாரருக்கு எந்த தவறான உள்நோக்கமும் இல்லை எனக்கூறியுள்ளார். இந்த வழக்கை அடுத்த ஆண்டு ஜன.,25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

saravanan
டிச 14, 2024 08:22

ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக ஆதவ் அர்ஜுனா.... இல்லை... இல்லை ....அல்லு அர்ஜுன் இந்த மாதிரி ஸ்டன்ட் அடித்திருக்க வேண்டும் கடைசியில் அது இப்படிப்பட்ட இக்கட்டில் மாட்டிவிடும் என்று அவர் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்


Venkateswaran Rajaram
டிச 13, 2024 17:44

அல்லு அர்ஜூன் கைது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.... ஒரு ரசிகர் இறந்தது அதிர்ச்சி இல்லையாம் இவன் ஜெயிலுக்கு போறது தான் ரொம்ப அதிர்ச்சியா இருக்குதா இந்த மாதிரி பொறம்போக்கு ரசிகர்கள் இருக்கிற வரைக்கும் ஒன்னும் பண்ண முடியாது


Senthoora
டிச 13, 2024 17:07

அப்போ அவருக்காக உங்களை உள்ளே வைக்கலாமா? சட்டம் தனது கடமையை செய்யுது,


Sampath Kumar
டிச 13, 2024 17:03

இது ஏறுபு டையது அல்ல அவர் வருகிறார் என்று சொன்னால் இன்னும் கூட்டம் கூடும் அதனால் முன் அறிவிப்பு செய்ய வில்லை அவரது ரசிக சிகாமணிகள் தான் இதற்கு முழு பொறு இந்திய சினிமா ரசிகர்கள் இல்லை இல்லை வெறியர்கள் இதுக்கும் ராய் சினிமாவும் உருப்படாது அதை பார்க்கும் வெறி பிடித்த ரசிக்கனும உருப்பட மாட்டான்


Narasimhan
டிச 13, 2024 16:50

ஜனங்களுக்கு அறிவில்லை. அதற்கு நடிகரை ஏன் தண்டிக்கவேண்டும். கள்ளச்சாராயம் குடித்து இறந்தார்கள். அதற்கு முழுக்க முழுக்க காரணம் காவலர்கள்தான். அவர்களை ஏன் கைது செய்யவில்லை


RAMAKRISHNAN NATESAN
டிச 13, 2024 16:44

நடிகர் விஜய் ஷாருக் கானை விட அதிக சம்பளம் பெரும் நிலையில்தான் கட்சி தொடங்கினார் ..... அவரது இடத்துக்கு அல்லு அர்ஜுன் வந்த நிலையில் இந்த சம்பவம் ....


venugopal s
டிச 13, 2024 16:21

இவருக்கு ஜாமீன் கொடுக்கும் போது புஷ்பா 3 படம் நடிக்க மாட்டேன் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு கொடுங்கள், படம் சகிக்க வில்லை!


Gokul Krishnan
டிச 13, 2024 20:09

அதை போல் ரெட் ஜெயன்ட் மூவீஸ் முன்னாள் ஓனரிடம் இருந்தும் நான் இது வரை சினிமா செய்திகள் பார்த்தது இல்லை என்று சத்தியம் வாங்க சொல்லுங்க


Padmasridharan
டிச 13, 2024 14:37

கள்ள சாராய-மது போதை இறப்புக்கு 25 லட்சம் மாதிரிதான் இதுவும் ஆனால் யாரையும் கைது செய்யவில்லையே.


Perumal Pillai
டிச 13, 2024 14:25

ஜெயலலிதா சசிகலாவும் மகாமக குளத்தில் ஜலக்கிரீடை செய்வதை பார்க்க வந்த பல நூறு பேர் இறந்தது மட்டும் சொர்கத்தின் திறப்புவிழாவா?


Rajan
டிச 13, 2024 13:48

இதுவே பாஜக ஆளும் மாநிலங்களில் ஆகி இருந்தால் கான் கட்சி கொந்தளித்து இருக்கும்.


முக்கிய வீடியோ