உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய விமானப்படை தளபதி ஆகிறார் அமர் பிரீத் சிங்

இந்திய விமானப்படை தளபதி ஆகிறார் அமர் பிரீத் சிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய விமானப்படை தளபதியாக ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் செப்.,30 அன்று பொறுப்பு ஏற்க உள்ளார்.தற்போது விமானப்படை தளபதியாக இருக்கும் ஏர் மார்ஷன் விவேக் ராம் சவுத்ரி செப்.,30 அன்று ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து காலியாகும் அந்த பதவிக்கு தான் அமர் பிரீத் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போது இவர், விமானப்படையின் துணைத்தளபதியாக உள்ளார். கடந்தாண்டு பிப்.,1 முதல் இப்பதவியில் உள்ளார்.1984 ல் விமானப்படையில் இணைந்த இவர், தேசிய பாதுகாப்பு அகாடமி, குன்னூரின் வெல்லிங்டன்னில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரி, தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றில் முக்கிய பதவிகளை இவர் வகித்து உள்ளார். மிக் 27 போர் விமானங்களின் கமாண்டிங் அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார்.சிறப்பாக பணியாற்றியதற்காக 2019 ல் அதி விஷிஷ்த் சேவை பதக்கம் மற்றும் 2023ம் ஆண்டில் பரம் விஷிஷ்த் சேவை பதக்கத்தையும் பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M S RAGHUNATHAN
செப் 21, 2024 16:46

I call upon our most intelligent Rahul Ghandhi to see to the photo of our Air force Chief. He is a Sikh wearing turbun . I think Rahul has eyes to see that. He will stop abusing the country at least from now What is the view of Congress chamchaas like Jayaram Ramesh, Ranjeet Singh Surjewala, karthi Chidambaram, Garage and host of others.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை