உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமேசான் நிறுவன பொருட்கள் கொள்ளை

அமேசான் நிறுவன பொருட்கள் கொள்ளை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சாகர்: மத்திய பிரதேசத்தில், லாரியில் கொண்டு செல்லப்பட்ட, 'அமேசான்' நிறுவனத்துக்கு சொந்தமான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். 'இ - காமர்ஸ்' எனப்படும், ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் நிறுவனம் ஈடுபட்டு உள்ளது. மொபைல் போன் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை நாடு முழுதும் இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. கப்பல் மற்றும் விமானங்களில் வரும் பொருட்கள், லாரிகள் வாயிலாக பல்வேறு பகுதி களுக்கு எடுத்து செல்லப் படுகின்றன. இதேபோல், அந்த நிறுவனத்துக்கு சொந்தமான பொருட்களை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி, ஹரியானாவின் குர்கானில் இருந்து மஹாராஷ்டிராவின் நாக்பூருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டது. மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தின் வழியாக அந்த சரக்கு லாரி சென்ற போது, சிலர்பூர் கிராமம் அருகே, ஆயுதமேந்திய நான்கு மர்ம நபர்கள் வழி மறித்தனர். டிரைவரை மிரட்டி, அந்த லாரியை யாரும் இல்லாத பகுதிக்கு ஓட்டிச் சென்ற அவர்கள், லாரியில் இருந்த பொருட்களை கொள்ளைஅடித்தனர். பின்னர், டிரைவரை அங்கேயே விட்டுவிட்டு மர்ம நபர்கள் வேறு வாகனத்தில் தப்பிச் சென்றனர். டிரைவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு குறித்து அமேசான் நிறுவனம் அறிவிக்கும் என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
செப் 22, 2025 06:27

முன்னாடி சென்னை அருகே லாரி லாரியா மொபைல் போன்களை கொள்ளையடிச்சாங்களே என்ன ஆச்சு?


SANKAR
செப் 22, 2025 06:56

thiruttu theeyamooka aatchi in madhyapradesh must end. no law and order


Vasan
செப் 22, 2025 06:03

கள்வனுக்கும் கள்வன் உண்டோ ? கண்டறிந்து சொல்லு அம்மா.


நிக்கோல்தாம்சன்
செப் 22, 2025 04:03

அமேசான் ஏற்கனவே ஜெப் பிசோஸ் கல்யாண செலவை ஐந்து ஐந்து ரூபாயாக வசூலித்து வருகிறது இனி இந்த கொள்ளை போன பொருட்களின் செலவையும் மக்களின் மீது சுமத்தும்


Kasimani Baskaran
செப் 22, 2025 04:01

அமெரிக்கப்பொருள்களை வாங்கவேண்டாம் என்று சொன்னால் யார் கேட்கிறார்கள்...


புதிய வீடியோ