உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் 160 தொகுதிகளில் வெற்றி: அமித்ஷா நம்பிக்கை

பீஹாரில் 160 தொகுதிகளில் வெற்றி: அமித்ஷா நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹார் சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி 160 தொகுதிகளில் வெற்றி பெறும் என பாஜ மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: நாட்டில் அரசியல் விழிப்புணர்வு உள்ள மாநிலங்களில் பீஹாரும் ஒன்று. கடந்த 20 ஆண்டுகளில் மாநிலம் கண்டுள்ள வளர்ச்சியை மக்கள் உணர்வார்கள். நிதிஷ்குமார் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளது என இளைஞர்கள் கூறி வருகின்றனர்.கடந்த காலங்களில் கொள்ளை, கொலை மற்றும் வழிப்பறி குறித்தே இங்கு விவாதித்தார்கள். இன்று வளர்ச்சியை பற்றி பேசுகிறார்கள். வரும் தேர்தலில் தேஜ கூட்டணி 160 தொகுதிகளில் வெற்றி பெற்று மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என ஆர்ஜேடி கட்சித் தலைவர் தேஜஸ்வி கூறியுள்ளார். மாநிலத்தில் 2.8 கோடி குடும்பங்கள் உள்ளன. புதிதாக 2.6 கோடி பேருக்கு வேலை கொடுக்க வேண்டும். இதற்காக 'பி', 'சி','டி' பிரிவுகளில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். அதற்கு சராசரியாக ரூ.39 ஆயிரம் சம்பளம் என நிர்ணயித்து கொண்டாலும் மொத்தம் ரூ.12.85 லட்சம் கோடி தேவை. இது பீஹாரின் பட்ஜெட்டை விட 4 மடங்கு அதிகம் ஆகும். இந்த வாக்குறுதியை தேஜஸ்விக்கு ராகுலும் லாலுவும் தான் அளித்து இருப்பார்கள். ரூ.12. 85 லட்சம் கோடிக்கு எங்கே போவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

vadivelu
நவ 02, 2025 06:53

கரெக்ட்டு, 75 வருடங்களாக எதுவும் செய்யவில்லை என்கிறார்.


Thravisham
நவ 02, 2025 05:07

மகிழ்ச்சி. திருட்டு வாரிசுகளும் மாபியா காங்கிரசும் துடைத்தெறிய பட்டே ஆகணும்


ஜெய்ஹிந்த்புரம்
நவ 02, 2025 04:00

மாநிலத்தில் 2.8 கோடி குடும்பங்கள் உள்ளன. புதிதாக 2.6 கோடி பேருக்கு வேலை கொடுக்க வேண்டும். - என்று அமீத் ச ஓப்பனா சொல்லியிருக்கார். அதாவது இம்புட்டு வருசமா பாஜக கூட்டணி ஆட்சி இருந்தும் ஒரு வேலை வாய்ப்பையும் பண்ணி குடுக்கல என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 02, 2025 03:54

“வாக்குசாவடி விடீயோ - ஆஃப், வோட்டு மெசின் - ரெடி , இதை எல்லாம் பண்ணியாச்சி போல, அதான் நம்பிக்கை” என்று சொல்லி பாருங்கள். பதறி அடித்து கொண்டு வருவாங்க


vivek
நவ 02, 2025 05:13

இங்கே டாஸ்மாக், ஓசி இருநூறு சொல்லி பாருங்க...குடும்பத்தோட ஓடி வருவாரு


vivek
நவ 02, 2025 05:14

ஏல அங்கே உன்னை போல ஒசி பிரியாணிக்கு வரமாட்டாங்க


vadivelu
நவ 02, 2025 06:56

உண்மை, அதிக கண்டுபிடிக்க தெரியாதவர்கள் கைலாகதவர்கள் ஆட்சிக்கு இனி வர முடியாது. இறைவன் நாளதை மட்டும்தான் செய்கிறாரா. விழுந்து விழுந்து தினம் பிரார்த்தனை செய்தாலும் இனி திருடர்கள் ஆட்சிக்கு வர மாட்டார்கள்.


அப்பாவி
நவ 01, 2025 22:56

சும்மாவா? ஒரு கோடி வேலை ரெடியா இருக்கு...


vivek
நவ 02, 2025 05:40

உங்களை தவிர இங்கு எல்லோருக்கும் வேலை இருக்கு...அவர்கள் வேலை செய்து பிழைக்கிறார்கள்....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை