மேலும் செய்திகள்
உலக கோப்பை ஸ்குவாஷ்: இந்தியா ‛சாம்பியன்
2 hour(s) ago
காந்திநகர்: குஜராத் மாநிலம் காந்திநகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேட்புமனு தாக்கல் செய்தார்.லோக்சபாவுக்கு ஏழு கட்டத் தேர்தல் நடக்கிறது. மூன்றாவது கட்டத் தேர்தலில், குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளுக்கும் மே7 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காந்திநகர் தொகுதியில் பா.ஜ., சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்டியிடுகிறார். இதற்காக அவர் இன்று( ஏப்.,19) வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உடன் இருந்தார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில், சோனல் படேல் களமிறக்கப்பட்டு உள்ளார்.கடந்த லோக்சபா தேர்தலில், இத் தொகுதியில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் அமித்ஷா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
2 hour(s) ago