உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆயுதங்களை கீழே போடாவிட்டால் கடுமையான நடவடிக்கை நிச்சயம் நக்சல்களுக்கு அமித் ஷா எச்சரிக்கை

ஆயுதங்களை கீழே போடாவிட்டால் கடுமையான நடவடிக்கை நிச்சயம் நக்சல்களுக்கு அமித் ஷா எச்சரிக்கை

புதுடில்லி, “ஆயுதங்களை கைவிட்டு சரணடையாவிட்டால், கடுமையான நடவடிக்கை நிச்சயம்,” என, நக்சல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். சத்தீஸ்கரில் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட 55 பேரை, டில்லியில் உள்ள தன் இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று சந்தித்தார்.சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் நக்சல்களால் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அங்கு துவங்கப்பட்ட பஸ்தார் அமைதிக் குழு சார்பில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. நக்சல்களால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலநிலை குறித்த ஆவணப்படம் அப்போது திரையிடப்பட்டது. சந்திப்பில் பங்கேற்ற சிலர், தாங்கள் அடைந்த துயரங்களை மத்திய அமைச்சரிடம் பகிர்ந்தனர்.அப்போது, அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான அரசு, நக்சல்களை முற்றிலும் அழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரும் 2026 மார்ச் மாதத்திற்குள், நக்சலிசத்தை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே, ஆயுதங்களை கைவிட்டு, நக்சல்கள் அனைவரும் சரணடைய வேண்டும்; மீறினால், கடும் நடவடிக்கைகளை சந்திக்க வேண்டி வரும். மத்திய அரசின் கடும் நடவடிக்கைகள் காரணமாக, சத்தீஸ்கரில் பெரும்பாலான இடங்களில் நக்சல்கள் ஒழிக்கப்பட்டு விட்டனர். சில மாவட்டங்களில் மட்டுமே தற்போது நக்சல் ஆதிக்கம் உள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தின் பசுபதிநாத் முதல், ஆந்திராவின் திருப்பதி வரை ஒரு வழித்தடத்தை அமைக்க நக்சல்கள் திட்டமிட்டு இருந்தனர். மோடி அரசின் தீவிர நடவடிக்கையால் அது தடுக்கப்பட்டது.பிரதமர் மோடி தலைமையின் கீழ், இடதுசாரி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார வசதிகள், வேலைவாய்ப்புகள் மற்றும் பிற நலத் திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை