உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமித்ஷா அருமையான பேச்சு: லோக்சபா உரைக்கு பிரதமர் மோடி பாராட்டு

அமித்ஷா அருமையான பேச்சு: லோக்சபா உரைக்கு பிரதமர் மோடி பாராட்டு

புதுடில்லி : லோக்சபாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்கிய உரையை அருமையான பேச்சு என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். அவரது பேச்சு, அரசின் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியது எனவும் அவர் தெரிவித்தார். பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர், கடந்த 1ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. லோக்சபாவில் நடந்த நேற்றைய விவாதத்தில், உரையாற்றிய அமித் ஷா, தேசிய பாதுகாப்பு, உள்துறை நடவடிக்கைகள், அரசின் சாதனைகளை விளக்கியதுடன், எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து, விரிவாக விளக்கினர். அவரது இந்த உரையை, பிரதமர் மோடி 'அருமையான பேச்சு ' என பாராட்டி உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7nv5q1n3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, 'அமித் ஷாவின் பேச்சு மிக சிறப்பானது. தேசிய நல்லனுக்கான முக்கியமான அம்சங்களை திறம்பட எடுத்துரைத்துள்ளார். அரசின் நிலைப்பாட்டை, தெளிவாகவும், துல்லியமாகவும் வெளிப்படுத்தியுள்ளார். உண்மைகளை துல்லியமாக சுட்டிக் காட்டிய உரை இது '. என பாராட்டி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Suresh
டிச 11, 2025 14:16

வசிஷ்டர் என்ற சொல்லின் பொருள் யாது ? வாக்குத் திறமையினால் உயர்ந்த இடத்தினை அடைந்தவன் என்று பொருள். வாக்கே அதிகாரம். வாக்கு தான் பொருளாதாரம். அதைத்தான் மார்க்கெட்டிங்க் என்கிறோம். வாயுள்ள பிள்ளையானால் பிழைக்கும் என்பது பழமொழி. நீதிமன்றத்திலே கூட வாக்கு தான் நீதியை நிலைநாட்ட உதவுகிறது. வாக்கு திறமை உள்ளவனே நல்ல நிர்வாகி. மேன்மேலும் உயர்வை அடைகிறான். பிரதமர் மிகச் சரியாக தனது அமைச்சரவையில் வாக்குத்திறமை கொண்டவர்களை நியமித்தார்.


SUBBU, MADURAI
டிச 11, 2025 14:40

உவமை அருமை...


baala
டிச 11, 2025 09:47

செயல்தான் நன்றாக இருக்க வேண்டும். பேச்சு அல்ல.


V Venkatachalam, Chennai-87
டிச 11, 2025 10:52

மனசாட்சி இப்புடி பேச வச்சிட்டுது.


Indhuindian
டிச 11, 2025 09:41

போட்ட போடுல துண்டை காணோம் துணியை காணோம்னு ஓடினாங்களே அதெல்லாம் பாத்துக்கிட்டுதானே இருந்தாங்க


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 11, 2025 09:18

அந்தப்பேச்சு புரிந்திருக்காது ........ புரிந்திருந்தால் வெட்கப்பட்டிருக்க வாய்ப்பு .......


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 11, 2025 09:17

அமித் ஷா பேச்சால் எதிர்க்கட்சியினர் புறமுதுகு காட்டி ஓடினர் .....


Ponnanmurugesan
டிச 11, 2025 09:14

கிரேட் காமெடி. ஒரு தமிழன் கூட ஒத்துக்க மாட்டான்


Ramesh Trichy
டிச 11, 2025 13:21

அவருக்குத்தான் ஹிந்தி தெரியாதே ஹீ ஹீ


srinivasan
டிச 11, 2025 14:58

நான் தமிழன் தான் மோடி சொன்னதை ஓத்துக்குறேன் .


பேசும் தமிழன்
டிச 11, 2025 19:02

ராகுல் பேச்சை யார் தான் கேட்பார்கள் ???.... அவர் பேசுவது அனைத்தும் கோமாளித்தனமாக இருக்கிறது.... அவரது பேச்சில் கொஞ்சம் கூட முதிர்ச்சி இல்லை.


oviya vijay
டிச 11, 2025 19:52

என்னது தமிழனா? அப்டின்னு ஒண்ணு இல்லவே இல்லை. திராவிடன் மட்டும் தான். அவன் பூராம் திருடர்கள்...


Field Marshal
டிச 11, 2025 08:32

வாக்கு இயந்திரங்களை அறிமுகம் செய்தவர் ராஜிவ் காந்தி தான் என்றும் அறிமுகப்படுத்திய பிறகு காங்கிரஸ் வென்றதையும் நினைவு படுத்தினார் .. பிஜேபி தேர்தல்களில் பெற்ற வெற்றிகளை விட தோல்விகளே அதிகம் ஆனால் தேர்தல் கமிஷனை என்றும் குறை சொன்னதில்லை என்று பேச ஆரம்பித்தவர் துண்டு சீட்டில் நிறைய குறிப்புகளுடன் தடுமாறாமல் பேசினார்


Sathesh-Prabu
டிச 11, 2025 08:19

திரு. மோடி மற்றும் திரு. அமித்ஷா அவர்களின் பேச்சை நேரடியாக ஹிந்தியிலேயே புரிந்து மற்றும் உணர்ந்து கொள்வதற்கு நான் ஹிந்தி படிக்க வேண்டும் என்று விழைகிறேன்.


VENKATASUBRAMANIAN
டிச 11, 2025 08:11

அவர் கூறியது அனைத்துமே உண்மை. எதிர்கட்சிகள் உருப்படியாக ஆக்கப்பூர்வமாக எதையுமே செய்வதில்லை. வெளிநடப்பு ஒன்றே செய்வது. மக்களுக்கான பிரச்சினை களை பேசுவதில்லை.


Oviya Vijay
டிச 11, 2025 07:29

நிதர்சனத்தில் அது நடக்காது என்பது தேர்தல் முடிவுகள் வரும் போது உணர்வீர்கள்... பேசுவது வாய் தானே... அது எதை வேண்டுமானாலும் பேசும்... மற்றவர்களைக் குஷிப் படுத்த... கனவு காணுங்கள்...


vivek
டிச 11, 2025 08:36

எல்லாம் நன்மைக்கே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை