உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறையில் இருந்தே சுயேட்சையாக வென்ற அம்ரித்பால்சிங்

சிறையில் இருந்தே சுயேட்சையாக வென்ற அம்ரித்பால்சிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமிர்தசரஸ்: சிறையில் இருந்து கொண்டே சுயேட்சையாக போட்டியிட்ட காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால்சிங் வெற்றி பெற்றார்.காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராக இருப்பவர் அம்ரித்பால்சிங் கடந்தாண்டு பயங்கர ஆயுதங்கள், நவீன துப்பாக்கிகளுடன் போலீ்ஸ் நிலையத்திற்குள் புகுந்து போலீசாரை மிரட்டிய வழக்கில் 2023 ஏப்ரலில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அசாம் மாநிலம் திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பஞ்சாப் மாநிலம் கஹாதூர் ஷாஹிப் லோக்சபா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். இதில் அம்ரித்பால் சிங் 3 லட்சத்து 68 ஆயிரத்து 560 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் குல்பிர்சிங்ஜிரா 1 லட்சத்து 96 ஆயிரத்து 279 வாக்குகள் பெற்றார். இதையடுத்து 1 லட்சத்து 72 ஆயிரத்து 281 வாக்குகள் வித்தியாசத்தில் காங்., வேட்பாளரை தோற்கடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Jebamani Mohanraj
ஜூன் 05, 2024 14:37

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி எந்த ஒரு சாதனையும் செய்யாமல் வாக்குகள் நிறைய வாங்கியதும் தேச ஒற்றுமைக்கு ஆபத்து


Mahendran Puru
ஜூன் 05, 2024 20:37

அதனால்தான் நாதகவை உறவாடி இணைக்க அண்ணாமலை தயாராகி விட்டார்.


Ramesh Sambasivan
ஜூன் 05, 2024 12:24

காலிஸ்தான் ப்ரோப்லேம் தொடக்கம் பஞ்சாப் குட்டிச்சுவர்தான்


Mohamed Yousuff
ஜூன் 05, 2024 06:20

ஆம். கோத்சேவை ஆதரித்த திருமதி பிரக்யா தாகூர் போன்ற சமூக, மத பயங்கரவாதிகள் மற்றும் பிற வெறியர்கள் உட்பட


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 05, 2024 02:35

நாடு எங்கே போகிறது? பயங்கரவாதி ஊழல் தருதலைகள் ஜெயிக்கிறார்கள் நேர்மையான காவல் அதிகாரிகள் தோற்கிறார்கள். சிறுபான்மையினர் மத வெறியில் பயங்கரவாதிக்கு வோட்டை போடுகிறார்கள், ஹிந்துக்கள் முட்டாள்தனத்தால் நேர்மையானவரிகளையும் தோற்க்கவைக்கிறார்கள்.


Rathinasabapathi Ramasamy
ஜூன் 05, 2024 12:45

யாரு இங்குள்ள தறுதலையா. எந்த ஹிந்துவும் பீ சே பீ காரர்களை போல வீரவசனம் வெத்து வேட்டு பேசமாட்டார்கள். என்னவோ ஹிந்துகளை தூக்கி நிறுத்துபவர் போலவே பேசுவார்கள். ஹிந்து க்களை பாதுகாக்க அந்த கடவுள் இருக்கிறார். பீ சே பீ இல்லை.


J.V. Iyer
ஜூன் 05, 2024 02:10

மக்களுக்கு என்னாச்சு? பயங்கரவாதிகளுக்கும், தேச விரோதிக்கும் வோட்டு போடுகிறார்கள்? நாட்டு வளச்சிக்கு பாடுபடும் பாஜகவுக்கு நாமம்.


Mahendran Puru
ஜூன் 05, 2024 20:38

நல்ல காமெடி பதிவு.


Jai
ஜூன் 04, 2024 21:56

பிரிவினைவாதிகள் வெற்றி பெறுவது மிக வருத்தமாக உள்ளது, திமுக உட்பட.


A1Suresh
ஜூன் 04, 2024 20:46

காலிஸ்தான் தீவிரவாதியை அதுவும் சிறையிலிருந்தபடி போட்டியிட எப்படி தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கலாம் ?


Mahendran Puru
ஜூன் 05, 2024 21:04

இந்த நபர் காங்கிரஸை எதிர்த்து இவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாஜக ஆதரவு இல்லாமலா?


மேலும் செய்திகள்