| ADDED : ஏப் 08, 2024 05:07 AM
ஸ்ரீநகர் : பாதுகாப்பு காரணங்களால் ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஐந்து லோக்சபா தொகுதிகளுக்கும், தலா ஒன்று என்ற வீதத்தில், ஐந்து கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்பட உள்ளன. மூன்று தொகுதிகள்
இந்நிலையில், இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் ஜனநாயக கட்சி, அனந்தநாக், ஸ்ரீநகர், பாரமுல்லா ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிடும் என அறிவித்துள்ளது. ஜம்மு, உதம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகள் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஸ்ரீநகர் தொகுதியில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் வாஹீத் பாராவும், பாரமுல்லா தொகுதியில் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் மிர் பயாசும் களமிறங்குதாக மக்கள் ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது.அனந்த்நாக் லோக்சபா தொகுதியில், கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி மீண்டும் போட்டியிடுகிறார். தேசிய மாநாட்டு கட்சி
இவர், கடந்த 2019ல் இதே தொகுதியில் போட்டியிட்டு, தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் ஹாசன் மசூத்திடம் தோல்வியை தழுவினார்.