உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருமலை திருப்பதி கோவிலில் வி.ஐ.பி., கலாசாரத்துக்கு முடிவு கட்டணும்: சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்

திருமலை திருப்பதி கோவிலில் வி.ஐ.பி., கலாசாரத்துக்கு முடிவு கட்டணும்: சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பதி: 'திருமலை திருப்பதி கோவிலில் வி.ஐ.பி., கலாசாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும்' என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.திருப்பதி மலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான உயர் அதிகாரிகளுடன் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில், சந்திரபாபு நாயுடு கூறியதாவது: திருமலை திருப்பதி வனப்பகுதியில் 70 முதல் 80 சதவீதம் வனத்தை அடர்ந்த வனப்பகுதியாக மாற்ற வேண்டும். கோவிலில் வி.ஐ.பி., கலாசாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும். வி.ஐ.பி.,கள் வரும்போது எந்தவித சலசலப்பும் இருக்கக் கூடாது.

பிரசாதம் தரம்

கோவிலில் அலங்காரம் செய்வதற்காக தேவையற்ற செலவுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். அரசு சார்பில், பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. பிரசாதம் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் எந்த சமரசமும் இல்லை. இவற்றையெல்லாம் பரிசோதிக்க நவீன ஆய்வகங்களை அமைப்போம். பக்தர்களிடம் கருத்துகளை பெற்று முன்னேறுவோம். பிரசாதத்தின் தரத்தை அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

விமலா
அக் 06, 2024 05:22

நல்கா கவனிங்க. வி.ஐ.பி கலாச்சாரத்துக்கு தான் முடிவு. அதாவது சலசலப்பு கூடாது. ஆனா வி.ஐ.பி தரிசனமே நிறுத்தப்படும் நு சொல்லலை. இவரு பாவம் ஏதோ கியூவில் நின்னு தரிசனம் செஞ்ச மாதிரி


Rasheel
அக் 05, 2024 22:04

ராமானுஜர் வழி வகுத்த வழிபாட்டு நடைமுறைகள் மற்றும் நேரம், கோவில் திறக்கும் நேரம், அடைக்கும் நேரம், பிரசாதம் அளவு, நைவேத்தியம் செய்யும் நேரம், திருவிழா முறைகள், பள்ளி அரை செல்லும் நேரம் ஆகியவை கடை பிடிக்க படுவதில்லை. ஆதிக்க சக்திகள், சாதிகள், அரசு அதிகாரிகள், அப்ரஹாமிய அரசியல் கூத்துக்கள் அங்கே நடக்கிறது. இது பல பிரச்சனைகளை உருவாக்கும்.


கிஜன்
அக் 05, 2024 21:30

வி.ஐ.பி கள ...எப்படி வேண்டுமானாலும் வரவேத்துக்குங்க ..... சாதா பக்தர்களை ...கொஞ்சம் மரியாதையுடன் நடத்துங்க ...


aaruthirumalai
அக் 05, 2024 21:00

அந்த பெருமாள யாராச்சும் காப்பாத்துங்க. கடவுளக்கும் நேரம் சரியில்லாம போகும்போல ஒரு மாத காலமாக படாதபாடு படுத்தாராங்கே


சாண்டில்யன்
அக் 05, 2024 16:40

அனைவருக்குமே ரூ 5000 டிக்கட்ன்னு போட்டுடுங்க அதானே ஒங்க திட்டம்


வைகுண்டேஸ்வரன்
அக் 05, 2024 16:10

சனாதனம் சமாதானம் ஆகிவிடும் என்கிறீர்கள். அதற்காக வருத்தப்படுகிறீர்களா?சனாதனம் சமாதானம் ஆகிவிடக் கூடாது என்கிறீர்களா? அதாவது எப்பவும் ஒருத்தருக்கொருத்தர் அடிச்சிக்கணும்??


Duruvesan
அக் 05, 2024 20:12

இப்போ உங்க ஷியா சன்னி அடிச்சிக்கிற மாதிரி தானே


Lion Drsekar
அக் 05, 2024 16:05

விபியைப்போல் எல்லோருமே சாமிதரிசனம செய்யலாம் என்பதை வரைபடத்துடன் திரு என் டி ஆருக்கு அனுப்பியிருந்தேன், எப்போதும்போல் அவரிடம் பணிபுரிபவர்கள் நான் கொடுத்த அதே முறையை எல் அண்ட் டி வழியாக அமல்படுத்தப்படும் என்று விளம்பரம் செய்தார்கள், இறைவன் ஒருவன் இருக்கிறான், அவர்களால் அந்த முறையை எப்படி எங்கு அமல்படுத்தப்படும் என்பதை அறியும் ஆற்றல் இல்லாததால் கைவிடப்பட்டது, திருக்கோவில்கள் என்றாலே எல்லோரும் சமம் என்ற நிலைக்கு ஒரு தீர்வு இப்பவும் வைத்திருக்கிறேன், அன்று ரோபோ என்ற இயந்திரத்தை 55 ஆண்டுகளுக்கு முன்னால் கண்டுபிடித்தேன் யாருமே ஊக்குவிக்கவில்லை, வெளிநாட்டில் பிறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், பரவாயில்லை, வீடு போ போ என்ற காடு வா வா என்று கூறுவதுபோல், இன்றைக்கு எனக்கு ஒரே ஆறுதல் தினமலர் மட்டுமே, வந்தே மாதரம்


வைகுண்டேஸ்வரன்
அக் 05, 2024 15:54

ச. பாபு ஆதாரம் இல்லாமல் சும்மா பரபரப்பு கிளப்பி சு. கோர்ட் மண்ட மேலயே குட்டியது. இதுவே இந்த பாபு மட்டும் பிஜேபி கூட்டணியில் இல்லாமல் இருந்திருந்தால், babu வை திட்டி கொட்டியிருப்பார்கள். மதம் மற்றும் வெறுப்பு அரசியல் தான் பிஜேபி யை சாவடிக்குது. இதை பிஜேபி உணரவேண்டும். எங்க.. என்னத்த உணர்வது?


Duruvesan
அக் 05, 2024 20:13

ஆமாம் உங்க கும்பலுக்கு மதமே இல்ல பாரு, அதான் அங்க மட்டும் கஞ்சி குடிக்காரு


sundarsvpr
அக் 05, 2024 15:47

திருமலை திருவேங்கடநாதனை தரிசிக்க வருபவர்கள் லட்டு பிரசாதம் பெற வருவதில்லை. தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிடவருகிறார்கள். . லட்டு விற்பனை ஒரு வியாபார நோக்கம். அதாவது லாபத்தை எதிர்பார்த்து. பொருள்கள் தரமானதா என்பதும் மட்டுமல்ல. பிரசாதம் செய்திடும் மடப்பள்ளியும் சுத்தமாக இருக்கவேண்டும். ஸ்வாமிக்கு படைக்கப்பட்டது என்றால் நேரம் காலம் உண்டு. மற்ற நேரத்தில் உள்ள பிரசாதம் வெறும் சாதம் தான். பெருமாளுக்கும் நித்திரை உண்டு. முதலில் நிர்வாகம் இதனை கவனிக்கவும்.


RAMAKRISHNAN NATESAN
அக் 05, 2024 14:12

வி ஐ பி கலாச்சாரம்தானே ? போட்டோவைப் பார்த்தாலே தெரியுது .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை