உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திர மாநில காங்., தலைவராகிறார் ஓய்.எஸ்.ஆர்., ஷர்மிளா

ஆந்திர மாநில காங்., தலைவராகிறார் ஓய்.எஸ்.ஆர்., ஷர்மிளா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐதராபாத்: தனது கட்சியை கலைத்து விட்டு காங்கிரசில் ஐக்கியமான ஓய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சி தலைவர் ஷிர்மிளாவிற்கு பரிசாக ஆந்திர மாநில காங்.,தலைவராக நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், தெலுங்கானாவில் ஓய்.எஸ்ஆர்., தெலுங்கானா என்ற கட்சியின் தலைவருமான ஷர்மிளா.48 தெலுங்கானாவில் கடந்தாண்டு (2023) நவம்பரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடபோவதில்லை எனவும் அதற்கு பதிலாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க போவதாக அறிவித்தார். தெலுங்கானாவில் காங்., பெரும்பான்மையுடன் ஆட்சியைபிடித்தது.இந்நிலையில் ஷர்மிளா தனது ஆதரவாளர்களுடன் கடந்த 4-ம் தேதியன்று டில்லியில் காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்.,எம்.பி ராகுல் ஆகியோரை சந்தித்து தனது கட்சியை காங்கிரசில் இணைந்தார். தெலுங்கானாவில் ஓட்டுக்கள் பிளவுபடுவதை தடுக்க காங்கிரசுடன் ஷர்மிளா இணைந்துள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஷர்மிளாவிற்கு ஆந்திர மாநில காங்., தலைவர் பதவியை வழங்கிட காங்., மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கு வசதியாக தற்போதை ஆந்திர மாநில காங்., தலைவராக உள்ள ஜி.ஆர். ராஜூ தனது பதவியை ராஜினமா செய்தார். இதையடுத்து அப்பதவிக்கு ஷர்மிளாவை காங்., மேலிடம் நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இம்மாநில முதல்வராக சொந்த அண்ணன் ஜெகமோகன் ரெட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
ஜன 16, 2024 09:15

கிருப கிருப கிருப????.


நரேந்திர பாரதி
ஜன 16, 2024 07:20

அண்ணன் ஜெயிச்சாலும் தங்கச்சி கொள்ளை அடிக்கலாம்... தங்கச்சி ஜெயிச்சாலும் அண்ணன் கொள்ளை அடிக்கலாம்... ஆக குடும்ப கொள்ளையர்களின் ஆட்சி தொடரும்


Ramesh Sargam
ஜன 16, 2024 06:51

அப்ப அந்த கட்சிக்காக பல வருடங்களாக உழைத்த மூத்த தலைவர்களுக்கு அல்வாதானா?


Selvaraj
ஜன 16, 2024 07:51

அண்ணாமலை மாநில தலைவராக நியமிக்கப்பட்டபோது இப்படி சொன்நீங்களா ஜி ?


sankaranarayanan
ஜன 16, 2024 01:09

காங்கிரசு குடும்ப சண்டையை துவக்கிவிட்டது அவர்களுக்கு தானும் ஒழுங்காக வாழ மாட்டார்கள் அடுத்தவர்களையும் ஒழுங்காக வாழ விட மாற்றார் இதுதான் இத்தாலி காங்கிரசின் கொள்கை


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 15, 2024 23:41

எலிக்கு தலையாக இருப்பதை விட சிங்கத்துக்கு வாலாக இருப்பதையே பெருமையாக நினைக்கிறார் போலும் .....


Ramesh
ஜன 15, 2024 22:34

A new agreement is set to be finalized between siblings, aided by their mother, to acquire assets from the Andra region.


Sriram V
ஜன 15, 2024 22:30

How shamelessly joined the party which killed her father


Bala
ஜன 15, 2024 22:26

திராவிடத் தெலுங்கர்களின் மரபணு குழி பறித்தல் குடும்பத்துக்குள்ளே


duruvasar
ஜன 15, 2024 19:53

டிலே அதுதானே . அப்பறம் என்ன இது ஒரு செய்தியாக வருகிறது. காங்கரஸில் சேர்ந்ததே இதற்குத்தானே


சண்முகம்
ஜன 15, 2024 19:50

தாயும் பிள்ளையென்றாலும் வாயும் வயிறும் வேறு. தனித்தனியாக சம்பாதிக்கனும்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை