உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அங்கித் திவாரி வழக்கு: தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

அங்கித் திவாரி வழக்கு: தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அங்கி திவாரி தொடர்புடைய வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி அமலாக்கத்துறை சார்பில், தொடரப்பட்ட மனு மீது 2 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த டாக்டரிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக, மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்தாண்டு டிச.1ம் தேதி கைது செய்தனர். திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அங்கித் திவாரி வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைத்து விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்தது. இன்று மனுவை விசாரித்த நீதிபதிகள், ‛‛ இரு தரப்பும் பிரச்னையை சுமூகமாக தீர்க்க முயற்சிக்கவில்லை என்றால் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்க நேரும்.காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் கைது நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக் கூடாது, அவ்வாறு இருப்பின் அதை நீதிமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது''. இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர். பின்னர், 2 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

D.Ambujavalli
ஜன 26, 2024 06:34

Sari Antha. Daaktar. Irupathu. Latcham. Koduththu. Amukkumalavu. Avarathu. Case. Enna enpathu. Velivaravillaiye 1


Kasimani Baskaran
ஜன 25, 2024 21:55

மாநிலத்தில் நடக்கும் ஊழல் நடவடிக்கையை மாநில அரசு கண்கானித்து மாநில அரசு அதிகாரியை பிடிக்கலாம். அதே மத்திய அரசு அதிகாரியை பிடிக்க வேண்டும் என்றால் துறை ரீதியாக மட்டுமே அணுக முடியும். கூடுதலாக மத்திய அரசு அலுவலகத்தில் மாநில அரசு காவல்த்துறை ஆய்வு செய்ய முன்னனுமதியில்லாமல் ஆவணங்களை எடுத்துச்செல்வது சட்டத்து புறம்பானது. இது பல உரசல்களுக்கு வழிவகுக்கும்.


sankaranarayanan
ஜன 25, 2024 20:48

செந்தில் பாலாஜியின் தம்பி திராவிட மாடல் அரசின் ஓர் அமைச்சர் வீட்டில் இன்னுமும் பதுங்கி இருக்கிறார் அவரை முதலில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடித்து வழக்கை விசாரிக்கட்டும்


A1Suresh
ஜன 25, 2024 17:31

அதிகாரத்தின் பல ஓட்டைகளில் புகுந்து ஊழல் செய்வது ஒரு புறமெனில், மற்றொரு புறம் சட்டத்தின் பல ஓட்டைகளில் புகுந்து தப்பிப்பது என்பதும் எளிதாகி விட்டது. இங்கே ஜெயலலிதா-சசிகலா போன்று ஊழல் செய்த மற்றையவரும் தண்டிக்கப்பட வேண்டும்


Dharmavaan
ஜன 25, 2024 20:16

ஜெயா வழக்கு போல் ஏன் கட்டுமரத்தில் மீது நடத்தப்படவில்லை கோர்ட்டின் பாரபட்சம் கேவலம்


ஆரூர் ரங்
ஜன 25, 2024 15:13

மாநில அமைச்சர் மீதுள்ள ஊழல் புகார்களை மாநில காவல்துறை தானே விசாரிக்கிறார்கள்? மைய அரசு நேரடியாக வழக்குதா தொடர்ந்தால் மாநில ஆளும்கட்சி ஏற்கிறதா? அது போலவே. மத்திய அரசு ஊழியர் சம்பந்தப்பட்ட லஞ்ச வழக்கை மத்திய அரசு CBI தான் விசாரிக்க முடியும். லஞ்சத்தால் பாதிக்கப்படாத மாநில அரசு விசாரிக்க சட்டத்திலிடமில்லை. மத்திய அரசின் துறைசார்ந்த Departmental விசாரணைக்குப் பின் அவர்களே புகாரளித்தால் மட்டுமே குற்ற விசாரணை.


Velan Iyengaar
ஜன 25, 2024 20:58

இந்த விஷயத்தில உச்சநீதிமன்றம் சொல்ல போகும் விஷயம்..... இனி எதிர்க்கட்சி ஆளும் மாநிலம் எல்லாம் இது போன்ற இன்ன பிற அத்துமீறல் மற்றும் அப்ட்டமானான ஒருதலைபட்ச ஒன்றிய நடவடிக்கைகளை எப்படி கையாளப்போகும் என்பது வரையறுக்கப்போகுது காத்திருக்கிறோம் தமிழகம் எப்போதும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரு முன்னோடி மாநிலம் என்பதில் இறுமாப்பு கொள்கிறோம்


Narayanan
ஜன 25, 2024 15:08

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அரசின் சார்பில் இயங்குவதால் காழ்புணர்ச்சியின் காரணமாகவே இந்த செயலை செய்திருக்கிறது . எனினும் ஏன் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியின் தம்பியை பற்றி தமிழக போலீசாரிடம் கேள்வி கேட்கவில்லை ?


duruvasar
ஜன 25, 2024 15:07

நீதியரசர்களுக்கு திராவிட மாடல் என்றால் என்னவென்று தெரியவில்லை என தெரிகிறது


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை