உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகாத்மா பட்டத்தை ஏற்க ஹசாரே மறுப்பு

மகாத்மா பட்டத்தை ஏற்க ஹசாரே மறுப்பு

அகமத் நகர்: கிராம சபையினர் அளித்த, 'மகாத்மா' பட்டத்தை ஏற்க, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மறுத்து விட்டார். ஊழலுக்கு எதிராக போராடி வரும் அன்னா ஹசாரேவை பாராட்டி, மகாராஷ்டிராவில் உள்ள அவரது சொந்த கிராமத்தினர், அவருக்கு, 'மகாத்மா' என்ற பட்டத்தை அளிப்பதாக, கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால், இதை ஏற்க மறுத்து விட்டார் ஹசாரே.இது குறித்து, நிருபர்களிடம் அவர் குறிப்பிடுகையில், 'காந்தியடிகளின் வழியை பின்பற்றும் சாதாரண இந்தியன் நான். காந்தியடிகள், அம்பேத்கர் போன்ற மகாத்மாக்களின் வழியை நாம் பின்பற்றி வாழ்வில் மேன்மையடைய வேண்டும். மக்களுக்கான பணியில் ஈடுபட்டுள்ள என்னை போன்றவர்களை மகாத்மா காந்தியோடு ஒப்பிட்டு பேசுவதை நான் விரும்பவில்லை' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !