உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மங்களூரு - பெங்களூரு, பீதர் - பெங்களூரு 2 பொருளாதார வழித்தடங்கள் அறிவிப்பு

மங்களூரு - பெங்களூரு, பீதர் - பெங்களூரு 2 பொருளாதார வழித்தடங்கள் அறிவிப்பு

பெங்களூரு, : மங்களூரு - பெங்களூரு, பீதர் - பெங்களூரு என இரண்டு பொருளாதார வழித்தடங்கள் அமைக்கப்படும்' என கர்நாடக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுப்பணித்துறை தொடர்பாக, முதல்வர் சித்தராமையா பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள்:l கேஷிப் - 4 திட்டத்தின் கீழ், மாநிலத்தின் வெவ்வேறு மாவட்டங்களில், 875 கி.மீ., நீளத்துக்கு மாநில நெடுஞ்சாலைகள் அமைக்க, 5,736 கோடி ரூபாய் ஒதுக்கீடுl மாநில நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டத்தின் 5வது கட்டத்தின் கீழ், மாநிலத்தில் 1,300 கி.மீ., நீளத்துக்கு, 4,000 கோடி ரூபாய் செலவில் பிரதான சாலைகள் மேம்படுத்தப்படும்l மத்திய அரசு நிதி உதவியுடன், பெலகாவியில் 450 கோடி ரூபாய் செலவில், 4.50 கி.மீ., நீளத்துக்கு மேம்பாலம் அமைக்கப்படும்l வாகன நெரிசல் குறைக்கும் வகையில், பெங்களூரு - மாண்டியா - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் அமைக்கப்படும்l மைசூரு குக்கரஹள்ளி அருகிலும்; கே.ஆர்.எஸ்., சாலை; ஷிவமொகா - பொம்மனகட்டே சாலை; கதக் மாவட்டம் ரோணாவின் மல்லாபுரா; சென்னப்பட்டணா - பைராபட்டணா சாலை; சிக்கபல்லாப்பூர் உட்பட ஆறு ரயில்வே மேம்பாலங்கள், சுரங்க பாதைகள் அமைக்க 350 கோடி ரூபாய் ஒதுக்கீடுl மங்களூரு - பெங்களூரு; பீதர் - பெங்களூரு என இரண்டு பொருளாதார வழித்தடங்கள் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.மங்களூரு - பெங்களூரு இடையே பொருளாதார வழித்தடம் அமைப்பதன் மூலம், மங்களூரு துறைமுகத்தை சுலபமாக இணைப்பது அரசின் நோக்கம். ஐரோப்பியா, மத்திய ஆசியா நாடுகளுக்கு சரக்குகளை கொண்டு செல்ல வசதியாக இருக்கும்.மேலும், பீதர் - பெங்களூரு இடையே பொருளாதார வழித்தடம் அமைப்பதன் மூலம், கல்யாண கர்நாடக பகுதிகள் பொருளாதார ரீதியில் மேம்படும்.இந்த இரு வழித்தடங்களிலும், வெவ்வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அமைய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ