வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பாகிஸ்தான் என்கிற நாடு உலக வரைபடத்தில் இருக்கும் வரையில், இந்தியாவிற்கு அருகில் இருக்கும்வரையில் தீவிரவாத தாக்குதல் இருக்கும். ஆகையால் பாகிஸ்தானை முதலில் ஒழிக்கவேண்டும், உலக வரைபடத்திலிருந்து அழிக்கவேண்டும்.
புதுடில்லி: இந்தியாவில் மீண்டும் தீவிரவாத தாக்குதலை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் கூறியதாவது: மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலை மீண்டும் நடக்க விடமாட்டோம். இந்தியாவுக்கு மட்டுமல்லாது உலகத்திற்கே, தீவிரவாதத்திற்கு எதிரான சின்னமாக மும்பை உள்ளது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக இருக்கும் வரை, தீவிரவாதத்தை எதிரான கூட்டமாகத் தான் அது நடக்கும். தீவிரவாத தாக்குதல் உள்ளான ஹோட்டலில் தான் தீவிரவாத எதிர்ப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தீவிரவாதத்திற்கு இந்தியா எப்போதுமே எதிரானது என்பது மக்களுக்கு தெரியும். இப்போது இருக்கும் தலைவர்கள் தீவிரவாதத்தை ஒழிக்கப் போராடி வருகின்றனர். தீவிரவாத்தை சகித்துக் கொள்ள முடியாது. இனி உடனுக்குடன் பதிலடி கொடுக்கப்படும். லடாக்கில் இந்தியா, சீனா எல்லைகளில் இருநாடுகளின் படைகளும் விரைவில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள், எனக் கூறினார்.