உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் மாஹே கப்பல்: கடற்படையில் இணைப்பு

நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் மாஹே கப்பல்: கடற்படையில் இணைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் ஐஎன்எஸ் மாஹே போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.கொச்சியில் உள்ள கப்பற்கட்டும் தளத்தில் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடற்படை கப்பல் வடிவமைப்ப மற்றும் இந்தியாவின் தன்னிறைவு பெற்ற பாரதம் என்ற முன்மாதிரி முயற்சியின் அதிநவீன அம்சத்தை குறிக்கிறது.இந்த போர்க்கப்பல் சிறியதாக இருந்தாலும் சக்தி வாய்ந்ததாகவும், கடல் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவதற்கு முக்கியமான துல்லியம் மற்றும் திறன் ஆகியவற்றை கொண்டுள்ளது என தெரிவித்துள்ள கடற்படை, நீர்மூழ்கி கப்பலை வேட்டையாடவும், கடலேர ரோந்து பணிகளை மேற்கொள்வதுடன், இந்தியாவின் முக்கிய கடல்சார் கொள்கைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் இந்த போர்க்கப்பல் கடற்படையில் அர்ப்பணிக்கப்பட்டது. கடற்படை தளபதி உபேந்திர திவேதி இந்த கப்பலை கடற்படையில் இணைத்து வைத்து பேசியதாவது: இந்திய கடற்படைக்கு தேவையான கொள்முதல் 75 சதவீதம் உள்நாட்டில் கொள்முதல் செய்யப்படுகிறது. போர்க்கப்பல் முதல் நீர்மூழ்கி கப்பல் வரையிலும், ஆயதங்கள் ஆகியன இந்திய கடற்படை தளங்கள், அரசு மற்றும் தனியார் கூட்டுக்கும், நமது நாட்டின் தொழில்துறை மற்றும் தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்துக்கும் உதாரணமாக உள்ளது.லடாக் முதல் இந்திய பெருங்கடல் வரை, தகவல் போர் முதல் கூட்டு தாக்கம் வரை ஒவ்வொரு களத்திலும் இந்திய கடற்படை சிறப்பாக செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்