உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதி லட்டு வேண்டாம் அர்ச்சகர் சங்கம் முடிவு

திருப்பதி லட்டு வேண்டாம் அர்ச்சகர் சங்கம் முடிவு

பெங்களூரு: 'திருப்பதி லட்டு தொடர்பான விவாதம் முடிந்து, தெளிவான முடிவு தெரியும் வரை எந்த நிகழ்ச்சிகளுக்கும், திருப்பதி லட்டு பயன்படுத்த வேண்டாம்' என, கர்நாடக அர்ச்சகர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.இது குறித்து, கர்நாடக அர்ச்சகர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை:மாநிலத்தின் 'ஏ' மற்றும் 'பி' பிரிவு கோவில்களில், திருக்கல்யாண உற்சவம், திருமணம், கிரஹ பிரவேசம், உபநயனம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகளுக்கு திருப்பதியில் இருந்து லட்டு வரவழைப்பது வழக்கம்.ஆனால், திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில், மாட்டு கொழுப்பு சேர்க்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே கோவில்களில் நடக்கும் எந்த நிகழ்ச்சிகளுக்கும், திருப்பதி லட்டு பயன்படுத்த வேண்டாம் என, முடிவு செய்துள்ளோம். லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் இல்லை என்பது, தெளிவாக தெரியும் வரை, திருப்பதி லட்டு பயன்படுத்தப்படாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை