உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவத்திற்கு எந்த மதமோ ஜாதியோ கிடையாது; ராகுலுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலடி

ராணுவத்திற்கு எந்த மதமோ ஜாதியோ கிடையாது; ராகுலுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பன்கா; ராணுவத்திற்கு எந்த மதமோ ஜாதியோ கிடையாது என்று ராகுலின் பேச்சுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.பீஹார் முதல் கட்ட சட்டசபை தேர்தல் பிரசாரம் அவுரங்காபாத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்பியும், லோக்சபா தலைவருமான ராகுல், ராணுவத்தை பற்றி கடுமையாக விமர்சித்தார். நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் உயர்ஜாதியினர் 10 சதவீதம் பேர் மட்டுமே ராணுவம், நீதித்துறை மற்றும் பெரிய நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்துவதாக குறிப்பிட்டார். எஞ்சிய 90 சதவீதம் மக்களில் உள்ள மற்ற ஜாதியினருக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி இருந்தார்.இந் நிலையில், ராகுலின் குற்றச்சாட்டுக்கு பாஜ மூத்த தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் பதிலடி கொடுத்துள்ளார். பீஹாரில் பன்கா மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது ராஜ்நாத் சிங் பேசியதாவது; ராணுவத்திற்கு எந்த மதமோ ஜாதியோ கிடையாது; ராணுவ வீரர்களுக்கு ஒரேயொரு மதம் மட்டுமே உள்ளது. அது சைன்ய தர்மம்(சைன்ய என்றால் ராணுவம், தர்மம் என்றால் கடமை, நீதி, நெறிமுறைகள் ஆகியவற்றை குறிக்கும். மகாபாரதத்தின் முதல் அத்தியாயமான சைன்ய தர்சனம் என்னும் போர் துவங்கும் முன் இரு படைகளையும் குறிப்பதாகும்) ஆகும். இதை தவிர வேறு எந்த மதமும் இல்லை. நம் நாடு நெருக்கடியை கண்ட போதெல்லாம் வீரர்கள் தங்களின் துணிச்சல், வீரம் மூலம் தலை நிமிர செய்தனர். ராணுவத்தை அரசியலுக்குள் இழுக்காதீர்கள். நாட்டில் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும். நாங்களும் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாளர்கள்தான். ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி இருக்கிறோம். ஜாதி, மதம் மற்றும் மதத்தின் அரசியல் தான் நாட்டுக்கு பெரும் தீங்கை விளைவித்துள்ளது. சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினரும் உயர வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். ஜாதி, மதம் என்ற அடிப்படையில் பாகுபாடு காட்ட விரும்பவில்லை. நம் நாட்டில் ஞானிகளும், மக்களும் ஒருபோதும் இதை சிந்தித்ததே இல்லை. ஆப்பரேஷன் சிந்தூர் மூலம் அனைத்து பயங்கரவாத நிலைகளையும் அழித்துவிட்டோம். இந்த நடவடிக்கை இன்னமும் முடிவடையவில்லை. தற்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உலகளவில் நம் நாடு சக்திவாய்ந்த நாடாக அறியப்படுகிறது. சர்வதேச அளவில் நம் நாட்டின் நற்பெயர் வளர்ந்து உள்ளது.இவ்வாறு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

spr
நவ 06, 2025 02:18

நம் நாடு நெருக்கடியை கண்ட போதெல்லாம் வீரர்கள் தங்களின் துணிச்சல், வீரம் மூலம் தலை நிமிர செய்தனர். ராணுவத்தை அரசியலுக்குள் இழுக்காதீர்கள்.ராணுவத்திற்கு ஜாதி மதம் இனம் மொழியென்ற பேதமெல்லாம் இல்லை என்பது உண்மையே அதனால்தான் இந்தியா உள்நாட்டில் இத்தனை எதிரிகள் இருந்தும் நாடு இந்த நாள்வரை காப்பாற்றப்பட்டிருக்கிறது. இதே போல காவற்துறையும் ஜாதி மதம் இனம் மொழியென்ற பேதமில்லாமல் செயல்பட்டால் நாட்டில் குற்றங்கள் குறையும் ஊழல் லஞ்சம் குறையும்


M Ramachandran
நவ 05, 2025 20:52

ராவுளுக்கு மதம் பிரச்னையில்லை. அயல் நட்டு மேல் அலாதி பிரியம். இங்கு எல்லாம் கருப்பு அயல்நாட்டில் எல்லாம் தனக்கு பிடித்த நிறத்தில் கிடைய்க்கும். அதனால் யாருக்கும் தெரியாமல் அயல்நாட்டிற்ற்க்கு அடிக்கடி ஓடி விடுவது பிடித்த செயல்.


MARUTHU PANDIAR
நவ 05, 2025 20:05

இவன் பேச்சை சாதாரண உளறலாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆபத்து நிறைந்த பின்புலம். ஆபரேஷன் 37 பெரிதாக கை கொடுக்காத நிலையில்,, இப்போது அதிக பட்ச வலிமையில் உள்ள இந்திய ராணுவத்தில் ஜாதியின் மூலம் பிரிவினியை புகுத்தி பலவீனப் படுத்தச் சொல்லி இவனுக்கு எஜமானின் உத்தரவாம் .


தமிழ்வேள்
நவ 05, 2025 20:03

பாஜக அளவு மீறி நியாய தர்மம் பார்க்கிறது...மிலேச்சர்களிடம் தர்மம் நியாயம் பார்க்க தேவையில்லை என்பதுதான் சுக்ர, விதுர, சாணக்கிய, பிருஹஸ்பதி நீதி சாஸ்திரங்களின் கருத்து.


V Ramanathan
நவ 05, 2025 19:54

இவரைவிட ஒரு கேவலமான ஆள் நாட்டில் கிடையாது.


Saai Sundharamurthy AVK
நவ 05, 2025 19:46

ராகுல்கந்தி அமெரிக்கா டீப் ஸ்டேட் மற்றும் பிபிசியின் அடியாள் தான்......! தேசத்துரோக வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.


சாமானியன்
நவ 05, 2025 19:42

வேறு நாடாக குறிப்பாக பங்களாதேஷாக இருந்தால் இப்படி பேசியதற்கு அவரை என்கவுண்டர் செய்திருப்பார்கள்,


RAMESH KUMAR R V
நவ 05, 2025 17:06

இந்தியா ராணுவம் ஆன்றும் இன்றும் என்றும் சாதி, மத, அரசியலுக்கு அப்பாற்பட்டது. இந்தியா தான் ராணுவத்தின் உயிர் மூச்சு. வளர்க பாரதம்.


K V Ramadoss
நவ 05, 2025 16:28

அரசியலில் எத்தனை தலைவர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியினராக இருக்கின்றனர் ? ஏன் சோனியாவும் ராகுலும் ஒதுங்கி வழிவிட்டு தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு காங்கிரசில் உயர் பதவிகளை தரவில்லை ? இவர்கள் குடும்பம்தானே இன்னமும் கொலோச்சி வருகின்றனர்


NALAM VIRUMBI
நவ 05, 2025 16:24

மடத்தனமாக பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ள ராகுல் தேசத்தின் சாபக்கேடு. இந்த கிரகம் காங்கிரசின் கடைசி அத்தியாயம். அறிவுப் பூர்வமாக பேசும் என்று எதிர்பார்ப்பதும் அபத்தம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை