உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அருணோதயா சூரிய ஒளி மின் உற்பத்தி குறைவு?

அருணோதயா சூரிய ஒளி மின் உற்பத்தி குறைவு?

பங்கார்பேட்டை: பங்கார்பேட்டை யலேசந்திரா கிராமத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சூரிய ஒளி அருணோதயா யோஜ்னா மின் உற்பத்தி திட்டத்தில் 50 சதவீதம் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.பங்கார்பேட்டை, பூதிகோட்டை அருகே உள்ள யலேசந்திரா கிராமத்தில் கர்நாடக மின் வாரியம் சார்பில் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. கடந்த, 2009 ஜனவரி 9ல் அப்போதைய மாநில முதல்வர் எடியூரப்பா பூமி பூஜையுடன் பணியைத் துவக்கிவைத்தார்.இதற்காக 15 ஏக்கரில் டைட்டான் எனர்ஜி சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்தது. 59 கோடி ரூபாய் செலவில் 13,300 சூரிய ஒளி பேனல்கள் நிறுவப்பட்டன. இதன் மூலம் 3 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது பூதிகோட்டை பகுதிக்கு போதுமானதாக இல்லை.திட்டத்துக்கான நிலத்தில் 10 ஏக்கரில் மட்டுமே சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன. இன்னும் 5 ஏக்கர் நிலத்தை டைட்டான் எனர்ஜி சிஸ்டம்ஸ் நிறுவனம் பயன்படுத்தவில்லை. அது காலியாகவே உள்ளது.மின் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி