உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆம்புலன்ஸ் வராததால் தந்தையின் உடலை ‛பைக்கில் கொண்டு சென்ற மகன்கள்

ஆம்புலன்ஸ் வராததால் தந்தையின் உடலை ‛பைக்கில் கொண்டு சென்ற மகன்கள்

பெங்களூரு: அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 80 வயது தந்தை உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராததால், மகன்கள் பைக்கில் கொண்டு சென்ற சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.கர்நாடக மாநிலம் தும்குர் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் 80 வயது கொடுகுல்லா ஹனுரப்பா என்பவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து 5 கி.மீ.தொலைவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்த தந்தையின் உடலை மீண்டும் கிராமத்திற்கு எடுத்துச் செல்ல அரசு மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தர தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது.இதையடுத்து தந்தையின் உடலை அவரது மகன்களான இருவரும் இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றனர். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மருத்துவ அதிகாரி கூறுகையில், வேறு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டது. காத்திருக்க நேரமில்லாமல் உடலை பைக்கில் எடுத்துச்சென்றுவிட்டனர் என்றார்.************


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N.Purushothaman
செப் 20, 2024 07:10

செத்த உடனேயே ஆம்புலன்ஸ் தயாரா இருக்கனும்ங்கிற மாதிரி எதிர்பார்க்கிறது ,பொறுமை இல்லாமல் அவதிப்படுவது எல்லாம் என்ன ரகம்ன்னு தெரியல ....சமூக ஊடகங்களில் கவனம் பெறுவதற்காக கூட சிலர் இப்படி எல்லாம் செய்கிறார்களோ என்கிற சந்தேகம் வலுக்கிறது ...அல்லது மரணத்தில் சந்தேகம் இருக்குமோ ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை