உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டசபை தேர்தல் புறக்கணிப்பு: பீஹாரில் லாலு மகன் நாடகம்

சட்டசபை தேர்தல் புறக்கணிப்பு: பீஹாரில் லாலு மகன் நாடகம்

இந்தாண்டு அக்டோபர், -நவம்பர் மாதங்களில் பீஹார் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இங்கு, வாக்காளர் பட்டியலை திருத்த, தேர்தல் ஆணையம் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பார்லிமென்ட் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றன.'எங்கள் கேள்விகளுக்கு ஆணையம் பதில் சொல்லவில்லை' என ராகுலும், லாலு பிரசாத் யாதவின் மகனுமா ன தேஜஸ்வியும் குற்றஞ்சாட்டினர். உடனே ஆணையம் , 'வெளிநாட்டவர், இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் ஆகியோர் தான், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்' என, பதிலளித்தது.இதையடுத்து, 'பீஹார் தேர்தலை நாங்கள் புறக்கணிப்பது குறித்து யோசிக்கிறோம்' என, கூறியுள்ளார் தேஜஸ்வி. உண்மையிலேயே எதிர்க்கட்சிகள் புறக்கணிக்குமா? அப்படியானால் தேர்தல் நடக்குமா?அப்படி எதிர்க்கட்சிகள் புறக்கணித்தால், தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின், ஜன் சுராஜ் கட்சி எதிர்க்கட்சி இடத்தை பிடித்துவிடும். மேலும், 'தேர்தல் ஆணையத்தின் வேலை, தேர்தலை நல்ல முறையில் நடுநிலையாக நடத்துவதுதான். அதற்காக, ஆணையம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளலாம்' என, அரசியல் சாசன பிரிவு, 324 தெளிவாக கூறியுள்ளது.ஒரு வேளை, எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகி, 'நாங்கள் தேர்தலை புறக்கணிப்பதால், தேர்தலை நிறுத்த வேண்டும்' என, மனு தாக்கல் செய்தால் என்னாகும்?கடந்த 1989ல் உச்ச நீதிமன்றத்தில் இப்படி ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. மிசோரம் சட்டசபை தேர்தலை, சில கட்சிகள் புறக்கணித்தன. எனவே, 'தேர்தலை தடை செய்ய வேண்டும்' என, கோரிக்கை வைக்கப்பட்டது.ஆனால், இதை உச்ச நீதிமன்றம் நிராகரித்து, 'வெறும் புறக்கணிப்பை காரணம் காட்டி, தேர்தலை நிறுத்த முடியாது' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.'தேர்தலை புறக்கணிப்பது என்பதெல்லாம் வெறும் நாடகம்' என்கின்றனர், பா.ஜ.,வினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பேசும் தமிழன்
ஜூலை 27, 2025 12:29

திருட்டு கும்பலை சேர்ந்த ஆட்கள் தேர்தல் புறக்கணிப்பு எல்லாம் செய்ய மாட்டார்கள்.... எல்லாம் சும்மா... பிம்பிளிக்கு பிளாப்பி.


Gopal
ஜூலை 27, 2025 08:22

ரொம்ப நல்லது. இந்த கயிஷடைகளை ஒரேடியாக தூக்கி போட்டு விடவேண்டியதுதான்.


VENKATASUBRAMANIAN
ஜூலை 27, 2025 08:11

நல்லது புறக்கணிக்கட்டும். போல வாக்காளர்கள் நீக்கியது சரியே. ஜனநாயகத்தை கேலி கூத்தாக நடத்த வேண்டாம். திருட்டு கும்பல்


GMM
ஜூலை 27, 2025 08:01

தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த அரசியல் சாசன பிரிவு, 324 அனுமதிக்கிறது. பதிவு பெற்ற கட்சிகள் தேர்தல் புறக்கணிப்பு செய்தால் அரசியல் சாசன மீறல். கட்சி பதிவு வாபஸ். கட்சி சொத்துகள் தேர்தல் ஆணையம் கட்டுபாட்டில் செல்ல வேண்டும். கட்சிக்கு நன்கொடை கொடுத்த தனி நபர், நிறுவனம் ரசீதை கொடுத்து பணத்தை திரும்ப பெற சட்டம் தேவை. அசையா சொத்துகள், கேட்பார் இல்லா பணம், நகை மாநில சமூக நலத்துறை எடுத்து கொள்ள வேண்டும். துரித நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துடன் ஒத்துழைக்க வேண்டும்.


மணியன்
ஜூலை 27, 2025 07:51

திருட்டு,கொள்ளைகும்பல் புறக்கணிப்பது நல்லதுதான்.


தாமரை மலர்கிறது
ஜூலை 27, 2025 07:19

வெரி குட். இந்தியா வேகமாக வளர சீனா போன்று ஒரே கட்சி தான் இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புறக்கணிப்பது நல்லது. அவர்களால் தேர்தலில் ஜெயிக்கவும் வாய்ப்பில்லை. தேர்தலே வீண் செலவு தான். இலவச வாக்குறுதிகள். ஊழல் லஞ்சம் வளர்வது ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தால் தான். இதற்கு தேர்தல் இல்லாத ஜனநாயகம் சிறந்தது. எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதை மக்களும், சுப்ரிம் கோர்ட்டும், தேர்தல் ஆணையமும் வரவேற்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை