உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

புவனேஸ்வர்: பார்வைக்கு அப்பால் இருக்கும் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் அஸ்தரா ஏவுகணை ஒடிசா கடலோர பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ., இந்திய விமானப்படையுடன் இணைந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானத்தில் இருந்து அஸ்தரா ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.ஒடிசா கடலோர பகுதியில் சுகோய் போர் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஆளில்லா விமானங்கள் மூலம் இருவேறு இடங்களில் அனுப்பப்பட்ட இரண்டு இலக்குகளையும் அஸ்திரா ஏவுகணை துல்லியமாக அழித்தது.ஏவுகணையின் அனைத்து செயல்பாடுகளும் ஒடிசாவில் உள்ள சந்திப்பூர் ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை மையத்தின் மூலம் பெறப்பட்ட தரவுகள் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டபோது அவை மிக சிறப்பாக செயல்பட்டன என்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் பாதுகாப்புத்துறை சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா புதிய மைல் கல்லை எட்டி இருக்கிறது. மத்திய பாதுகாப்பு மற்றும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மட்டுமின்றி ஹிந்துஸ்தான் விமான நிறுவனம் உள்பட 50க்கும் மேற்பட்ட பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அஸ்தரா ஏவுகணை உருவாக்கத்தில் பங்கெடுத்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.ஏவுகணை உருவாக்கம் மற்றும் வெற்றிகரமான சோதனையில் பங்கெடுத்த அனைவருக்கும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 12, 2025 08:58

சீனா ரொம்ப படபடப்பா இருக்கு ..... உங்க டீம் சீனாவுக்கு விலை போயிடாம பார்த்துக்குங்க .......


Kalyanaraman
ஜூலை 12, 2025 08:44

சுதந்திரத்திற்கு பிறகு பிஜேபி அரசில் தான் இந்தியாவின் ஆண்மை மேலும் மேலும் வலுப்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டும் வருகிறது. வாழ்க பாரதம் வளர்க பாரதம்


சமீபத்திய செய்தி