உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்: டில்லியில் அதிர்ச்சி

முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்: டில்லியில் அதிர்ச்சி

புதுடில்லி: மக்கள் குறைதீர் முகாமில் கலந்து கொண்ட டில்லி முதல்வர் ரேகா குப்தாவின் தலை முடியைப் பிடித்து இழுத்து,கன்னத்தில் அறைந்த நபரை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.டில்லி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறும் நிகழ்வு இன்று (ஆகஸ்ட் 20) காலை முதல்வர் இல்லத்தில் நடந்தது. அப்போது வந்த ஒரு நபர் திடீரென முதல்வர் மீது தாக்குதல் நடத்தினார். தலை முடியைப் பிடித்து இழுத்து,கன்னத்தில் அறைந்த அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uj0q34a2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கூட்டத்தில் முதல்வரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் காயம் ஏற்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என டில்லி போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. முதல்வர் தாக்கப்பட்ட சம்பவம் டில்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரிய விஷயம்

சம்பவ இடத்தில் இருந்த அஞ்சலி என்ற பெண் கூறியதாவது: மக்கள் குறைதீர் முகாமில் பங்கேற்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஒரு ஏமாற்றுகாரர் முதல்வர் ரேகா குப்தா கன்னத்தில் அறைந்தார். இது ஒரு பெரிய விஷயம். நான் அங்கே இருந்தேன். அந்த நபர் முதல்வரிடம் பேசிக்கொண்டிருந்த போது திடீரென தாக்கினார். பின்னர் அந்த நபரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

துரதிர்ஷ்டவசமானது!

முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக டில்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் கூறியதாவது: இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. முதல்வர் முழு டில்லியையும் வழிநடத்துக்கிறார். அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் கண்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் இது போன்ற சம்பவங்கள் நடப்பது குறையும் என்று நான் நினைக்கிறேன்.இந்த சம்பவம் பெண்ணின் பாதுகாப்பை அம்பலப்படுத்துகிறது. டில்லி முதல்வருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், ஒரு சாதாரண ஆணோ அல்லது சாதாரண பெண்ணோ எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். கொலை முயற்சி வழக்குடில்லி முதல்வர் ரேகா குப்தாவை தாக்கிய நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது. பொது ஊழியரை தாக்கி, கடமையை செய்ய விடாமல் தடுத்ததாகவும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.அந்த நபரின் பெயர் ராஜேஷ் சக்ரியா, 40, என்றும், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. நாய்ப்பிரியரான அவர், தெருநாய்களை பிடிக்கும் டில்லி மாநில அரசின் நடவடிக்கையால் ஆத்திரம் அடைந்து இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று அந்த நபரின் தாயார் பேட்டி அளித்துள்ளார்.தாக்குதல் நடத்திய நபர், முதல் நாளே டில்லி முதல்வரின் வீட்டுக்கு சென்று நோட்டமிட்டதும், வீடியோ எடுத்ததும், சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Abdul Rahim
ஆக 20, 2025 18:14

பரக்கத் அலி பதில் சொல்லுங்க அதர்மராஜ் , சங்கிகளுக்கு வக்காலத்து வாங்குறது நீங்கதானே


என்னத்த சொல்ல
ஆக 20, 2025 16:08

இது திமுகாவின் சதியாதான் இருக்கும்.


Priyan Vadanad
ஆக 20, 2025 15:51

தேர்தல் ச்சீய்திருத்தங்களால் சுருதி குறைந்து அபசுரம் தட்டும் பாவகவுக்கு சுருதி சேர்க்க இப்படி ஒரு நிகழ்ச்சி.


Abdul Rahim
ஆக 20, 2025 15:29

குடியுரிமை திருத்த சட்ட திருத்தத்தை எதிர்த்து நடந்த போராட்டங்களில் இந்த அம்மணி எப்படி ரவுடியிசம் பன்னினார் னு நாடே அறிந்த விஷயம் ஆகமொத்தம் ஒரு ரவுடியை அவரது இனமான இன்னொருவன் தாக்கி இருக்கிறான்....


Abdul Rahim
ஆக 20, 2025 15:27

வாய்கொழுப்பை பாருங்கள் எப்படில்லாம் சமாளிக்கிறானுங்க பாருங்க எதிரிக்கட்சிகள் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் இது போன்ற தவறு நடந்தால் அந்த ஆளும் கட்சி மீது தரக்குறைவான விமர்சனத்தை இங்கே பதிவுகிறார்கள் அதே நேரம் இவர்கள் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் நடந்தாலும் எதிராணியை விமர்சித்து ஒண்ணுமே தெரியாவார்கள் போல எஸ்கேப் ஆகிறார்கள் இப்போ அய்யா சங்ஸ் இப்ப சொல்லுங்களேய்யா பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லைன்னு....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 20, 2025 15:11

தாக்கினவன் மர்ம மனிதனா >>>>


Azar Mufeen
ஆக 20, 2025 14:29

பிஜேபியின் உள்கட்சி சதி வேலை


Barakat Ali
ஆக 20, 2025 15:02

எப்படி ???? திமுக போலவா ????


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 20, 2025 15:11

நீயி இப்படி எழுதுறதை பார்த்தா உன் மூர்க்க கூட்டத்தின் சதிவேலையா இருக்குமோன்னு சந்தேகம் வருது .....


திகழ்ஓவியன்
ஆக 20, 2025 14:13

கடவுள் கூட அந்த காலத்தில் உதவி வில்லை என்று தெரிகிறது


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 20, 2025 15:14

உண்மைதான் ........ பேஸ் மேக்கர் வெச்சிருக்கிற ஆளை கட்சிப் பிரச்னை, மக்கள் காறியுமிழ்வதில் இருந்து காப்பாற்ற வேண்டிய கட்டாயம், மாப்பிள்ளையே எதிரியாகும் நிலைமை .... இவற்றில் பிசியா இருந்துட்டாராம் .....


ram
ஆக 20, 2025 13:52

காங்கிரஸ் செட் UP செய்ய நபராக இருக்கும் விசாரித்தால் உண்மை தெரியும்.


venugopal s
ஆக 20, 2025 13:04

முதல்வருக்கே இந்த நிலை என்றால் அங்கு நடக்கும் ஆட்சியின் லட்சணம் அப்படி! ஆமாம், அங்கு எந்தக் கட்சியின் ஆட்சி நடக்கிறது?


Ganapathy
ஆக 20, 2025 13:23

அவரை அடித்தவன் ஒரு சட்டவிரோத காங்கிரஸ் தொண்டன். எதையாவது தெரிந்துகொண்டு அறிவோடு எழுது.


vivek
ஆக 20, 2025 13:24

என்ன செய்வது உன்னை போல திருட்டு காங்கிரஸ் கூட்டம் செய்த வேலைதான்


Barakat Ali
ஆக 20, 2025 14:38

பதிலுக்கு அந்த நபர் நையப்புடைக்கப்படவில்லை என்பதைக் கவனித்தீரா? துக்ளக்காருக்கு இது நடந்திருந்தால் உங்களைப்போன்ற கழகக் கண்மணிகள் தாக்கியவரை சேதபடுத்தாமல் விட்டிருப்பீர்களா ????


V Venkatachalam
ஆக 20, 2025 14:45

எல்லாரும் ஓடி வாங்க. எல்லாரும் ஓடி வாங்க. டில்லியில் எந்த கட்சி ஆட்சி நடக்குதுன்னு இந்த வீணாப்போன கோபாலுக்கு தெரியலையாம். யாராவது தயவு பண்ணி இந்த முகமூடிக்கு அந்த விஷயத்தை சொல்லுங்கோ. இந்த ஆளு என்னத்த உருட்டுறான் பாருங்கோ.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை