வாசகர்கள் கருத்துகள் ( 2 )
எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுவதன் விளைவாக மணிப்பூர் பற்றி எரிகிறது. ராகுலை கைது செய்தால், மணிப்பூரில் அமைதி திரும்பும்.
கட்டுப்படுத்த துப்பில்லேன்னாலும் நொண்டிக் காரணம் மட்டும் சொல்லத் தெரியுது
சுராசந்த்பூர்,மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில், ஹமர் பழங்குடியின தலைவர் ரிச்சர்டு ஹமரை தாக்கிய மர்ம நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கும்படி, பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவியது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், 2023 மே மாதம் இட ஒதுக்கீடு தொடர்பாக, கூகி - மெய்டி பிரிவினரிடையே மோதல் வெடித்தது.இதில், 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.அங்கு மீண்டும் இயல்புநிலையை மீட்டெடுக்கும் நோக்கில், சமீபத்தில் பொது போக்குவரத்து சேவை துவங்கப்பட்டது. இதற்கு எதிராக, சுராசந்த்பூர், சேனாபதி உள்ளிட்ட மாவட்டங்களில் கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுராசந்த்பூர் மாவட்டத்தின் ஜென்ஹாங் லம்கா என்ற பகுதியில், நேற்று முன்தினம் இரவு, 'ஹமர் இன்பு' என்ற பழங்குடியின அமைப்பின் பொதுச்செயலர் ரிச்சர்டு ஹமரை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கி தப்பியோடினர். இந்நிலையில், ரிச்சர்டு ஹமரை தாக்கிய மர்ம நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சுராசந்த்பூரின் பல்வேறு இடங்களில், பொது மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருசில இடங்களில் கடைகளை மூடும்படி போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். சில பகுதிகளில் கல் வீச்சு சம்பவங்கள் நடந்தன. முன்னெச்சரிக்கையாக, சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில், சுராசந்த்பூர் மாவட்டம் முழுதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் நேற்று அறிவித்தது.
எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுவதன் விளைவாக மணிப்பூர் பற்றி எரிகிறது. ராகுலை கைது செய்தால், மணிப்பூரில் அமைதி திரும்பும்.
கட்டுப்படுத்த துப்பில்லேன்னாலும் நொண்டிக் காரணம் மட்டும் சொல்லத் தெரியுது