நீதித்துறையை தாக்குவதா?
ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் நீதித்துறைக்கு எதிரான கருத்துகளை கூறுவது நடுநிலையானதல்ல, அரசியல் அமைப்புக்கு முரணானது. நீதித்துறையை அரசு தாக்கக் கூடாது. நீதித்துறையின் சுதந்திரம் நாட்டின் ஜனநாயகத்திற்கு அடிப்படையானது.கபில் சிபல், ராஜ்யசபா எம்.பி., சுயேச்சைஇடஒதுக்கீட்டை நீக்குங்கள்!
மதம் மாறிய ஆதிவாசிகளையும், ஆதிவாசி சமூகத்துக்கு வெளியே திருமணம் செய்த பெண்களையும் இடஒதுக்கீட்டில் இருந்து நீக்க வேண்டும். மதம் மாறிய ஆதிவாசிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது, ஆதிவாசி சமூகத்தின் கலாசார மற்றும் மத அடையாளத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.சம்பாய் சோரன், ஜார்க்கண்ட், முன்னாள் முதல்வர், பா.ஜ.,மும்மொழி முக்கியம்!
மஹாராஷ்டிராவில், 1 -- 5ம் வகுப்பு வரை மூன்றாவது மொழியாக ஹிந்தி கட்டாயமாக்கி இருப்பதை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. மஹாராஷ்டிராவில் மராத்தி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் முக்கியமானவை. தாய்மொழியான மராத்திக்கு எப்போதும் முன்னுரிமை உண்டு. அஜித் பவார், மஹா., துணை முதல்வர்,தேசியவாத காங்.,