வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பாரதத்தின் பெரிய்யய்ய்யய ஜோக்கர்...
ஆட தெரியாத ஆட்டகாரிக்கு ரோடு கோனல் சொன்ன கதைதான்? பப்புவின் நிலமையே?
புவனேஸ்வர்: ''மஹாராஷ்டிராவை போலவே பீஹாரிலும் தேர்தல் முறைகேடு செய்ய முயற்சி நடக்கிறது'' என தேர்தல் கமிஷன் மீது காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் குற்றம் சாட்டி உள்ளார்.ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த காங்கிரஸ் பேரணியில் ராகுல் பேசியதாவது: பிஜூ ஜனதா தளம் தனது ஆட்சியில் செய்ததை, போல் பா.ஜ., அரசு செய்கிறது. ஏழை மக்கள் கையில் இருக்கும் செல்வத்தை பா.ஜ., அரசு திருடுகிறது. ஒடிசா பா.ஜ.,வால் சூறையாடப்படுகிறது. விவசாயிகள், பெண்களைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகளைக் கேட்டேன். பழங்குடியினரின் நிலங்கள் பிரிக்கப்படுகிறது. பா.ஜ., முதலாளிகளுக்கு பக்கபலமாக இருக்கிறது. காங்கிரஸ் ஏழை மக்கள், தலித்துகள், பழங்குடியினருக்கு ஆதரவாக நிற்கிறது. மஹாராஷ்டிராவை போலவே பீஹாரிலும் தேர்தல் முறைகேடு செய்ய முயற்சி நடக்கிறது. தேர்தல் கமிஷன் தனது வேலையை செய்யாமல் பா.ஜ.,வில் ஐ.டி.,விங் போல் செயல்படுகிறது. மஹாராஷ்டிராவில், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களுக்கு இடையில், 1 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த வாக்காளர்கள் யார், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. வாக்காளர் பட்டியல் மற்றும் ஓட்டுச்சாவடிகளில் பதிவான சி.சி.டி.வி., காட்சிகளை எங்களுக்கு வழங்குமாறு நாங்கள் பலமுறை தேர்தல் கமிஷனிடம் கூறினோம். ஆனால் தேர்தல் கமிஷன் எங்களுக்கு அதையே வழங்கவில்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.
பாரதத்தின் பெரிய்யய்ய்யய ஜோக்கர்...
ஆட தெரியாத ஆட்டகாரிக்கு ரோடு கோனல் சொன்ன கதைதான்? பப்புவின் நிலமையே?